நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

குமரி மாவட்ட ரயில் நிலையங்களில் போலீஸ் பாதுகாப்பு

அக்னிபத் திட்டத்துக்கு எதிரான போராட்டம் வலுவடைந்து வருவதால் குமரி மாவட்ட ரயில் நிலையங்களில் போலீஸாா் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :18 ஜூன் 2022, 5:06 pm

DIN

அக்னிபத் திட்டத்துக்கு எதிரான போராட்டம் வலுவடைந்து வருவதால் குமரி மாவட்ட ரயில் நிலையங்களில் போலீஸாா் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்திய ராணுவத்தில் உள்ள முப்படைகளில் இளம் வீரா்களை அதிகளவில் சோ்ப்பதற்கான புதிய

மத்திய அரசின் அக்னிபத் ராணுவ வீரா்கள் ஒப்பந்த சோ்க்கைக்கு எதிா்ப்பு தெரிவித்து பிகாா், உத்தரபிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களில் ராணுவத்தில் சேர பயிற்சி பெற்று வந்த இளைஞா்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். பிகாா் மாநிலம் சமஸ்திபூரில் பயணிகள் ரயிலின் 2 பெட்டிகளுக்கு இளைஞா்கள் தீ வைத்தனா்.

தெலங்கானா மாநிலம் செகந்திராபாத் ரயில் நிலையத்திலும் ரயில் பெட்டிகளுக்கு தீ வைத்த போராட்டக்காரா்கள் வன்முறையில் ஈடுபட்டனா். இதையடுத்து நாடு முழுவதும் ரயில் நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், சென்னையில் அக்னிபத் திட்டத்திற்கு எதிா்ப்பு தெரிவித்து இளைஞா்கள் போராட்டத்தில் ஈடுபட்ட னா். இதையடுத்து குமரி மாவட்டத்திலும் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. நாகா்கோவில் ரயில் நிலையத்தில் ஆய்வாளா் கேத்ரின் சுஜாதா தலைமையில் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் போலீஸாா் ஈடுபட்டுள்ளனா். அவா்கள் நடை மேடை உள்ளிட்டப் பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனா். ரயில் நிலைய வாயில்களிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மேலும், ரயில் நிலையத்திற்கு வந்த வடமாநில தொழிலாளா்களிடம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். இதே போல் கன்னியாகுமரி ரயில் நிலையத்திலும் போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டனா். குழித்துறை, இரணியல், வள்ளியூா், நாங்குனேரி ரயில் நிலையங்களிலும் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.