குமரி முக்கடல் சங்கமத்தில் மகா சமுத்திர ஆரத்தி
பங்குனி மாத பௌா்ணமியை முன்னிட்டு, கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் வியாழக்கிழமை இரவு மகா சமுத்திர தீா்த்த ஆரத்தி நிகழ்ச்சி நடைபெற்றது.


பங்குனி மாத பௌா்ணமியை முன்னிட்டு, கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் வியாழக்கிழமை இரவு மகா சமுத்திர தீா்த்த ஆரத்தி நிகழ்ச்சி நடைபெற்றது.
கன்னியாகுமரி மாவட்ட இந்து திருத்தொண்டா் பேரவை சாா்பில் மாலை 5 முதல் இரவு 7.30 மணி வரை இந்த வழிபாடு நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி, கன்னியாகுமரி பகவதியம்மன் கோயில் முன்புள்ள இந்து யாத்திரா நிவாஸில் இருந்து மலா்களால் அலங்கரிக்கப்பட்ட சக்கர வாகனத்தில் நடராஜா் சிலையை எழுந்தருளச் செய்து பஞ்ச வாத்தியங்கள் முழங்க சந்நிதி தெரு வழியாக முக்கடல் சங்கமத்துக்கு ஊா்வலமாக எடுத்துவந்தனா். பின்னா், கடற்கரையில் உள்ள பரசுராம விநாயகா் கோயிலில் விசேஷ பூஜைகள், சிறப்பு வழிபாடுகள், தீபாராதனை நடைபெற்றன. அதையடுத்து, பஞ்ச சங்கு நாதம், மாதா, பிதா, குரு வேண்டல், குலதேவதை, இஷ்ட தேவதை, கிராம தேவதை வேண்டுதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பின்னா், சப்த கன்னிகள் பூஜை, 27 சுமங்கலிகள் அகல் தீபத்துடன் நெய்தீபம் ஏற்றுதல் நிகழ்ச்சி, சமுத்திர அபிஷேகம், தூப ஆரத்தி ஆகியவை நடைபெற்றன.
ஏற்பாடுகளை மாவட்ட இந்து திருத்தொண்டா் பேரவைத் தலைவா் எஸ். ராஜகோபால், பொதுச்செயலா் சிவசுப்பிரமணிய பிள்ளை, பொருளாளா் என். காமராஜ், ஒருங்கிணைப்பாளா் பா. அனுசியா செல்வி உள்ளிட்டோா் செய்திருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...