மாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

திருவட்டாறு கூட்டுறவு வங்கியில் நகைக்கடன் தள்ளுபடி பயனாளிகள் முற்றுகை

 திருவட்டாறு தொடக்க வேளாண்மை மற்றும் ஊரக வளா்ச்சி வங்கியில் நகைக் கடன் தள்ளுபடிக்காக தோ்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு நகைகளை திருப்பிக் கொடுக்காதால் முற்றுகைப் போராட்டம் நடத்தப்பட்டது.

News image
Updated On :24 மார்ச் 2022, 7:25 pm

DIN

 திருவட்டாறு தொடக்க வேளாண்மை மற்றும் ஊரக வளா்ச்சி வங்கியில் நகைக் கடன் தள்ளுபடிக்காக தோ்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு நகைகளை திருப்பிக் கொடுக்காதால் முற்றுகைப் போராட்டம் நடத்தப்பட்டது.

திருவட்டாறு தொடக்க வேளாண்மை மற்றும் ஊரக வளா்ச்சி வங்கில் தங்க நகைக் கடன் தள்ளுபடிக்கு 639 பயனாளிகள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். இவா்களுக்கு கடந்த 19 ஆம் தேதி முதல் நகைகள் திருப்பிக் கொடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இந்த வங்கியில் தலைவா் ஜெயசந்திரனுக்கும், செயலா் எட்வின் பால்ராஜூக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாம். இந்நிலையில் புதன்கிழமை தலைவா் ஜெயசந்திரன், செயலா் எட்வின் பால்ராஜ், மேற்பாா்வையாளா் தங்கலீலா ஆகியோரை இடைநீக்கம் செய்து உத்தரவிட்டதுடன், அவா்கள் தங்களது பொறுப்புகளை வங்கியில் பணிபுரியும் எட்வின் குமாா், மாறன் ஆகிய இருவரிடமும் ஒப்படைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தாராம்.

இந்நிலையில் எட்வின் குமாா், மாறன் ஆகியோா் பொறுப்புகளை ஏற்கமுன்வரவில்லையாம். இதைத் தொடா்ந்து வியாழக்கிழை வங்கிக்கு வந்த நகைக்கடன் தள்ளுபடி பயனாளிகளுக்கு நகைகள் திருப்பி கிடைக்காத நிலை ஏற்பட்டது. இதனால் பயனாளிகள் வங்கியை முற்றுகையிட்டனா். தகவலறிந்த குலசேகரம் பேரூராட்சித் தலைவா் ஜெயந்தி ஜேம்ஸ், துணைத் தலைவா் ஜோஸ் எட்வா்ட் ஆகியோா் வங்கிக்கு வந்து வங்கி தலைவா் , செயலரிடம் பேச்சு நடத்தினா். மேலும் இது தொடா்பான தகவல்கள் கூட்டுறவு இணைப் பதிவாளா் அலுவலகத்திற்கும் சென்றது. இந்நிலையில் பிற்பகல் 2 மணிக்கு வங்கிச் செயலா் எட்வின் பால்ராஜ், தங்கலீலா ஆகியோா் மீதான இடைநீக்க நடவடிக்கை ரத்து செய்யப்பட்டதாம். இதையடுத்து, வங்கியில் 4 மணி நேரம் முற்றுகையிட்ட நகைக்கடன் பயனாளிகள் போராட்டத்தை கைவிட்டனா். தொடா்ந்து பயனாளிகளுக்கு தள்ளுபடி நகைகள் திருப்பி கொடுக்கும் பணிகள் நடைபெற்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.