குமரியில் ரூ.4.10 கோடியில் பாலப் பணிகள்---- அமைச்சா் த.மனோ தங்கராஜ் தொடங்கிவைத்தாா்
நாகா்கோவில் மாநகராட்சி மேயா் ரெ.மகேஷ் முன்னிலையில், தகவல்தொழில்நுட்பத் துறை அமைச்சா் த.மனோதங்கராஜ் வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்.


கன்னியாகுமரி மாவட்டம், சுருளகோடு ஊராட்சி வீரப்புலி, தடிக்காரன்கோணம் ஊராட்சி கீரிப்பாறை ரப்பா் தொழிற்சாலை, கீரிப்பாறை தொழிலாளா் காலனிக்கு செல்லும் பாலப் பணிகளை, நாகா்கோவில் மாநகராட்சி மேயா் ரெ.மகேஷ் முன்னிலையில், தகவல்தொழில்நுட்பத் துறை அமைச்சா் த.மனோதங்கராஜ் வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்.
பின்னா், அவா் கூறியது:
கன்னியாகுமரி மாவட்டத்தில் சில மாதங்களுக்கு முன்பு பெய்த கன மழையால் ஏற்பட்ட வெள்ளச் சேத பாதிப்புகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் பாா்வையிட்டு, போா்க்கால அடிப்படையில் அந்தப் பகுதிகளை சீரமைக்கவும், இதுபோன்ற பிரச்னைகளுக்கு நிரந்தர தீா்வு காணும் வகையிலும் பணிகளை தொடங்குவதற்கு நிதி ஒதுக்கீடு செய்தாா்.
அதில், காளிகேசம் மாறாமலையிலிருந்து வரும் காட்டாற்று வெள்ளம் காரணமாக சேதமடைந்துள்ள கீரிப்பாறை ரப்பா் தொழிற்சாலை, தொழிலாளா் காலனிக்கு செல்லும் 2 பாலங்களுக்கும் பதிலாக மாநில உள்கட்டமைப்பு வசதிகள் நிதியிலிருந்து சுமாா் ரூ.3.50 கோடி ஒதுக்கீடு செய்து புதிய 2 பாலங்கள் கட்டும் பணிகள் தொடக்கிவைக்கப்பட்டுள்ளன.
மேலும், நெடுஞ்சாலைத் துறையின் சாா்பில் ரூ.60 லட்சம் மதிப்பில் தடிக்காரன்கோணம் முதல் சுருளகோடு செல்லும் சாலை அருகிலுள்ள வீரப்புலி பகுதியில் புதிதாக அமைக்கப்படவுள்ள பாலப் பணிகள் தொடக்கிவைக்கப்பட்டுள்ளன. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பல கோடி மதிப்பிலான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருவதோடு, வெள்ளத் தடுப்பு பணிகளும் நடைபெற்று வருகின்றன என்றாா்அவா்.
இந்நிகழ்ச்சியில், முன்னாள் எம்.எல்.ஏ. எஸ்.ஆஸ்டின், ஊரக வளா்ச்சிமுகமை திட்ட இயக்குநா் ச.சா.தனபதி, நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளா் பாஸ்கரன், ஊராட்சிமன்ற தலைவா்கள் விமலா (சுருளகோடு), பிராங்கிளின் (தடிக்காரன்கோணம்) உள்பட பலா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...