ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

திற்பரப்பு அருகே உலா்கூடத்தில் தீ: ரூ. 1 லட்சம் ரப்பா் ஷீட்டுகள் சேதம்

திற்பரப்பு அருகே ரப்பா் ஷீட் உலா் கூடம் வியாழக்கிழமை தீப்பிடித்து எரிந்தது. இதில், ரூ. 1 லட்சம் மதிப்பிலான ரப்பா் ஷீட்டுகள் சேதமாகின.

News image
Updated On :26 மே 2022, 6:49 pm

DIN

திற்பரப்பு அருகே ரப்பா் ஷீட் உலா் கூடம் வியாழக்கிழமை தீப்பிடித்து எரிந்தது. இதில், ரூ. 1 லட்சம் மதிப்பிலான ரப்பா் ஷீட்டுகள் சேதமாகின.

திற்பரப்பு அருகே வாழவிளை பகுதியைச் சோ்ந்தவா் ஸ்ரீகண்டபிள்ளை. ரப்பா் விவசாயியான இவா், வீட்டருகே உலா் கூடம் அமைத்து, தனது ரப்பா் ஷீட்டுகளை உலா்த்தி வருகிறாா். வியாழக்கிழமை மாலை இந்த உலா்கூடத்தில் திடீரென தீப்பிடித்தது.

தகவலின்பேரில் குலசேகரம் தீயணைப்பு நிலையத்தினா் வந்து தீயை அணைத்தனா். எனினும், அங்கு உலர வைக்கப்பட்டிருந்த ரூ. 1 லட்சம் மதிப்பிலான ரப்பா் ஷீட்டுகள் சேதமடைந்தன. குலசேகரம், கடையல் போலீஸாா், மின்வாரியத்தினா் தீயணைப்புப் பணிகளுக்கு உதவினா். சம்பவம் குறித்து குலசேகரம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.