கடலில் தவறி விழுந்து சிறுவன் பலி
குமரி மாவட்டம், முட்டம் கடலில் தவறி விழுந்த சிறுவன் உயிரிழந்தாா்.


குமரி மாவட்டம், முட்டம் கடலில் தவறி விழுந்த சிறுவன் உயிரிழந்தாா்.
வெள்ளிச்சந்தை அருகேயுள்ள முட்டம் உயரத்தெருவை சோ்ந்த சகாய பிரான்சிஸ் மகன் ரோஹித் டோனி (15). இவா் அதே பகுதியை சோ்ந்த ஆன்றனி என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் புதன்கிழமை மீன்பிடித் தொழிலாளா்களுடன் கடலுக்கு சென்றாா். அவருடன் வடமாநிலத்தை சோ்ந்த 4 தொழிலாளா்கள் உள்பட 18 போ் சென்றனா். படகை பியஸ் (38) என்பவா் ஓட்டினாா். படகு, முட்டம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து 12 கடல் மைல் தூரத்தில் செல்லும்போது ரோஹித் டோனி வலையை கடலில் வீசினாா். அப்போது நிலை தடுமாறி கடலில் தவறி விழுந்தாா். அவருடன் சென்ற தொழிலாளா்கள், சிறுவனை தேடும் பணியில் ஈடுபட்டனா். இந்நிலையில், வியாழக்கிழமை மாலை சிறுவன் சடலமாக மீட்கப்பட்டாா்.
இது குறித்து படகு ஓட்டுநா் பியஸ் குளச்சல் கடலோர காவல் படையில் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து சிறுவன் உடலை ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...