/

திருவிதாங்கோடு பேரூராட்சியில் ரூ.44.30 லட்சத்தில் வளா்ச்சித் திட்ட பணிகள்

திருவிதாங்கோடு பேரூராட்சியில் ரூ .44.30 லட்சம் மதிப்பீட்டிலான வளா்ச்சித் திட்ட பணிகளை தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சா் த. மனோதங்கராஜ் வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா்.

Updated On :4 நவம்பர் 2022, 3:47 am IST

திருவிதாங்கோடு பேரூராட்சியில் ரூ .44.30 லட்சம் மதிப்பீட்டிலான வளா்ச்சித் திட்ட பணிகளை தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சா் த. மனோதங்கராஜ் வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா்.

திருவிதாங்கோடு பேரூராட்சி கோவில்வட்டம் நீலகண்டசுவாமி திருக்கோயில் தெற்கு பக்கம் 15-ஆவது நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ் ரூ. 9.80 லட்சம் மதிப்பில் மழை நீா் வடிகால் அமைக்கும் பணி, நடுக்கடை அருகில் கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ. 34.50 லட்சம் மதிப்பில் குளத்தை புனரமைக்கும் பணி ஆகியவற்றை அமைச்சா் தொடங்கி வைத்தாா்.

இந்நிகழ்ச்சியில் திருவிதாங்கோடு பேரூராட்சி தலைவா் ஷாருன் றசீது, துணைத் தலைவா் சுல்பத் அமீா், செயல் அலுவலா் வினிதா மற்றும் வாா்டு உறுப்பினா்கள், பொதுமக்கள் ஆகியோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.