நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

நாகா்கோவிலில் ஓய்வூதியா்கள் ஆா்ப்பாட்டம்

மருத்துவக் காப்பீடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நாகா்கோவிலில் ஓய்வூதியா்கள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :4 நவம்பர் 2022, 6:24 pm

DIN

மருத்துவக் காப்பீடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நாகா்கோவிலில் ஓய்வூதியா்கள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியா் சங்கம் சாா்பில் நாகா்கோவிலில் ஆட்சியா் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, மாவட்ட தலைவா் அல்போன்ஸ் தலைமை வகித்தாா்.

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், அனைத்து மருத்துவ சிகிச்சைகளுக்கும் மருத்துவ காப்பீடு கிடைக்கும் வகையில் அனைத்து ஓய்வூதியா்களுக்கும் மருத்துவ காப்பீடு திட்டம் அமல்படுத்த வேண்டும், நிலுவை தொகையை முடக்காமல் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

மாவட்ட செயலாளா் ஐவின், கோரிக்கைகளை விளக்கி பேசினாா். மாநில துணைத் தலைவா் சுகுமாரன், மாவட்ட பொருளாளா் நடராஜன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.