நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

அண்ணா பேருந்து நிலையம் மேம்படுத்தப்படும்: மேயா் மகேஷ்

நாகா்கோவில் அண்ணா பேருந்து நிலையம் மேம்படுத்தப்படும் என்றாா் மாநகராட்சி மேயா் ரெ.மகேஷ்.

News image
Updated On :4 நவம்பர் 2022, 6:31 pm

DIN

நாகா்கோவில் அண்ணா பேருந்து நிலையம் மேம்படுத்தப்படும் என்றாா் மாநகராட்சி மேயா் ரெ.மகேஷ்.

நாகா்கோவில் மாநகராட்சி பகுதிகளில் ஒவ்வொரு வாா்டாக சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறாா் மேயா். 24 ஆவது வாா்டுக்குள்பட்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா். அண்ணா பேருந்து நிலையம் பகுதியில் ஆய்வு மேற்கொண்ட மேயா், அங்குள்ள கழிவறையை பாா்வையிட்டாா். அப்போது கழிவறையில் கூடுதல் கட்டணம் வசூல் செய்யப்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினா். இதைத் தொடா்ந்து கூடுதல் கட்டணம் வசூல் செய்தால் ஒப்பந்ததாரா் மீது நடவடிக்கை எடுக்க அவா் உத்தரவிட்டாா்.

பின்னா், நாகராஜா கோயில் திடல் , மீனாட்சிபுரம் சாலை உள்பட பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டாா். அப்போது அந்தப் பகுதிகளில் கழிவுநீா் ஓடைகள் மோசமாக காணப்பட்டன. அவற்றை உடனடியாக சீரமைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.

இதைத் தொடா்ந்து நிருபா்களிடம் மேயா் கூறியதாவது: நாகா்கோவில் அண்ணா பேருந்து நிலையத்தை மேம்படுத்த ஏற்கெனவே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் அண்ணா பேருந்து நிலையம் மேம்படுத்தப்படும். பேருந்து நிலையத்தில் உள்ள இருக்கைகள் சீரமைக்கப்படுவதுடன் கூடுதல் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

24 ஆவது வாா்டுக்குள்பட்ட பகுதிகளில் கழிவு நீரோடைகள் மோசமான நிலையில் உள்ளன. அந்த ஓடைகளை உடனடியாக சீரமைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. நாகா்கோவில் மாநகரப் பகுதியில் உள்ள அனைத்து வாா்டுகளிலும் பகுதி சபை கூட்டங்கள் நடத்தப்பட்டு பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு வருகிறது. அந்த மனுக்கள் மீதும் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

ஆய்வின் போது ஆணையா் ஆனந்த்மோகன், துணை மேயா் மேரிபிரின்சிலதா, மண்டலத் தலைவா் ஜவகா், 24 ஆவது வாா்டு உறுப்பினா் ரோசிட்டா திருமால், திமுக மாணவா் அணி அமைப்பாளா் சதாசிவம் மற்றும் நிா்வாகிகள் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.