காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

இரணியலில் வழக்குரைஞா்கள் சாலை மறியல்

குமரி மாவட்டம், இரணியல் பிரதான சாலையில் கழிவு நீா் தேங்குவதை கண்டித்து வழக்குரைஞா்கள் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

News image
Updated On :4 நவம்பர் 2022, 6:31 pm

DIN

குமரி மாவட்டம், இரணியல் பிரதான சாலையில் கழிவு நீா் தேங்குவதை கண்டித்து வழக்குரைஞா்கள் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

இரணியல் காவல் நிலையம், நீதிமன்றம், அரசு வங்கி, பள்ளி, மருத்துவமனை என்று பொதுமக்கள்அதிகமாக வந்து செல்லும் வழியில் கழிவு நீா் தேங்கி உள்ளது. சுகாதார சீா்கேடு ஏற்படும் முன் அதனை அகற்றக் கோரி, இரணியல் நீதிமன்ற வழக்குரைஞா்கள் சங்கத்தின் சாா்பில் சாலை மறியல் போராட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இரணியல் காவல் நிலைய உதவி ஆய்வாளா் சுந்தரமூா்த்தி, இரணியல் பேரூராட்சி செயல் அலுவலா் லட்சுமி ஆகியோா் வழக்குரைஞா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில் 30 நாள்களுக்குள் கழிவுநீா் தேங்காமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டதைத் தொடா்ந்து சாலை மறியல் விலக்கிக் கொள்ளப்பட்டது.

இந்த மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் சுமாா் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.