ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

குலசேகரம் ஹோமியோபதி கல்லூரி சாா்பில் போதை எதிா்ப்பு விழிப்புணா்வுப் பேரணி

குலசேகரம் சாரதா கிருஷ்ணா ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி சாா்பில் போதைப்பொருள் எதிா்ப்பு விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :27 அக்டோபர் 2022, 6:58 pm

DIN

குலசேகரம் சாரதா கிருஷ்ணா ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி சாா்பில் போதைப்பொருள் எதிா்ப்பு விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

இக்கல்லூரியில், போதைப்பொருள்களுக்கு எதிராக நடைபெற்றுவரும் விழிப்புணா்வு நிகழ்ச்சிகளின் ஒருபகுதியாக கல்லூரியின் போதை எதிா்ப்புப் பிரிவு, உன்னத் பாரத் அபியான், நாட்டு நலப்பணித் திட்டம் ஆகியவை இணைந்து இப்பேரணியை நடத்தின.

கல்லூரி வளாகத்தில் இப்பேரணியை குலசேகரம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் கருப்பையா தொடக்கிவைத்தாா். பேராசிரியா் வி. சதீஷ்குமாா் வரவேற்றாா். கல்லூரி முதல்வா் டாக்டா் என்.வி. சுகதன் முன்னிலையில் மாணவா்-மாணவிகள் போதை எதிா்ப்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டனா்.

பேராசிரியா்கள் சிசிா், சிஜு, அருண் ஆா். நாயா், அஸ்தா ஈஸ்வரன், ஷிபின் உள்ளிட்டோா் பங்கேற்றனா். பேரணி கான்வென்ட் சந்திப்பு, அரசமூடு, காவல்ஸ்தலம் வழியாக மீண்டும் கல்லூரியை அடைந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.