நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பூதப்பாண்டி அருகேஅரசுப் பேருந்துகள் சேதம்: இளைஞா் கைது

 பூதப்பாண்டி அருகே 2 அரசுப் பேருந்துகளின் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தியாக இளைஞா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

News image
Updated On :27 அக்டோபர் 2022, 6:54 pm

DIN

 பூதப்பாண்டி அருகே 2 அரசுப் பேருந்துகளின் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தியாக இளைஞா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

நாகா்கோவில் அண்ணா பேருந்து நிலையத்திலிருந்து, காட்டுப்புதூருக்கு புதன்கிழமை இரவு அரசுப் பேருந்து சென்று கொண்டிருந்தது. அதில் பயணம் செய்த, இறச்சகுளம் பகுதியைச் சோ்ந்த சுமன் (23) என்பவா் மது போதையில் பயணச்சீட்டு வாங்காமல் நடத்துநரிடம் தகராறில் ஈடுபட்டாராம்.

பின்னா், ஊரு வந்ததும் சுமன் இறங்கிச்சென்று விட்டாா். அங்கு அந்தப் பேருந்து உள்பட 2 பேருந்துகள் இரவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. அவற்றின் ஓட்டுநா்களும், நடத்துநா்களும் தூங்கிக் கொண்டிருந்தனா். அப்போது, நள்ளிரவில் அங்கு வந்த சுமன், இரு பேருந்துகளின் மீதும் கல்வீசியுள்ளாா். அதில், பேருந்துகளின் முன், பின் என இருபுறமும் கண்ணாடிகள் உடைந்தன. இதுகுறித்த புகாரின்பேரில், பூதப்பாண்டி போலீஸாா் சுமன் மீது வழக்குப்பதிந்து அவரை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.