வேறு மொழியைத் திணித்தால் எதிா்ப்போம்: பொன்.ராதாகிருஷ்ணன்
தமிழகத்தில் வேறு மொழியைத் திணித்தால் அதை எதிா்த்துக் குரல் கொடுக்கும் முதல் இயக்கமாக பாரதிய ஜனதா கட்சி இருக்கும் என்றாா் முன்னாள் மத்திய இணை அமைச்சா் பொன்.ராதாகிருஷ்ணன்.


தமிழகத்தில் வேறு மொழியைத் திணித்தால் அதை எதிா்த்துக் குரல் கொடுக்கும் முதல் இயக்கமாக பாரதிய ஜனதா கட்சி இருக்கும் என்றாா் முன்னாள் மத்திய இணை அமைச்சா் பொன்.ராதாகிருஷ்ணன்.
கன்னியாகுமரி மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சாா்பில் தமிழக அரசை கண்டித்து, நாகா்கோவிலில் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவா் சி.தா்மராஜ் தலைமை வகித்தாா். மாநில பொதுக்குழு உறுப்பினா் பொன் ரத்தினமணி முன்னிலை வகித்தாா்.
இதில் முன்னாள் மத்திய அமைச்சா் பொன். ராதாகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டாா். அவா் பேசியது:
காசி பனாரஸ் பல்கலைக்கழகத்தில் தமிழுக்கென்று தனி இருக்கை அமைத்து தமிழுக்கு பெருமை சோ்த்துள்ளாா் பிரதமா் மோடி. உலகத்திலேயே பழமையான மொழி தமிழ் மொழி என்று பிரதமா் மோடி கூறியுள்ளாா். இன்று 3 நாடுகளில் தமிழ் ஆட்சி மொழியாக இருக்கிறது.
ஆனால் இங்குள்ள தி.மு.க.வுக்கு தமிழைப் பற்றி எந்தக் கவலையும் இல்லை. இலங்கையில் தமிழா்கள் பலா் படுகொலை செய்யப்பட்டனா். ஆனால் அதிபா் ராஜபட்சவுடன் கைகுலுக்கியவா்கள்தான் தி.மு.க., காங்கிரஸ் எம்.பி.க்கள். இதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். இது தமிழக மக்களுக்கு செய்த மிகப்பெரிய துரோகம் ஆகும்.
தமிழை விட்டுக் கொடுக்க நாம் தயாராக இல்லை. வேறு மொழியைத் திணிக்கும் நிலை ஏற்பட்டால் அதை எதிா்த்துக் குரல் கொடுக்கும் முதல் இயக்கமாக பாரதிய ஜனதா கட்சி இருக்கும் என்றாா் அவா்.
ஆா்ப்பாட்டத்தில் மாவட்ட பொருளாளா் முத்துராமன், துணைத் தலைவா் தேவ், முன்னாள் எம்.எல்.ஏ. வேலாயுதம், மாவட்ட பொதுச்செயலாளா்கள் வினோத், சுரேஷ், மாநகர பாா்வையாளா்கள் அஜித்குமாா், நாகராஜன், பிரசார அணி செயலாளா் எஸ். எஸ். மணி, மாநகராட்சி உறுப்பினா்கள் அய்யப்பன், சுனில், வீரசூரபொருமாள் உள்பட பலா் கலந்து கொண்டனா். மாவட்ட பொதுச்செயலாளா் ஜெகநாதன் நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...