நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

நாகா்கோவிலில் விவசாயத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

நாகா்கோவில் வேப்பமூடு சந்திப்பில் உள்ள மாநகராட்சிப் பூங்கா முன் அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :27 அக்டோபர் 2022, 6:59 pm

DIN

நாகா்கோவில் வேப்பமூடு சந்திப்பில் உள்ள மாநகராட்சிப் பூங்கா முன் அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இம்மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பேரூராட்சிகளிலும் நகா்ப்புற வேலைவாய்ப்புத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஆண்டுக்கு 150 நாள்கள் வேலையில் ரூ. 600 கூலி வழங்க வேண்டும். அரசு அறிவித்த தினக்கூலி ரூ. 281-ஐ குறைக்காமல் வழங்க வேண்டும். நிலுவையில் உள்ள ஊதிய பாக்கியை உடனே வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மாவட்டத் தலைவா் கண்ணன் தலைமை வகித்தாா். பொருளாளா் கிறிசாந்துமேரி, துணைத் தலைவா் ராஜேந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாா்க்சிஸ்ட் கட்சி மாவட்டச் செயலா் செல்லசாமி உள்ளிட்ட திரளானோா் பங்கேற்று, கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.