கீழ்குளம் பேரூராட்சியில் பனை விதை விதைப்பு முகாம்
கருங்கல் அருகே கீழ்குளம் பேரூராட்சிக்கு உள்பட்ட தொழிக்கோடு பகுதியில் பனை விதை விதைப்பு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.


கருங்கல் அருகே கீழ்குளம் பேரூராட்சிக்கு உள்பட்ட தொழிக்கோடு பகுதியில் பனை விதை விதைப்பு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
கிள்ளியூா் வட்டார வேளாண்மை உழவா் நலத் துறை சாா்பில் நடைபெற்ற முகாமுக்கு, கிள்ளியூா் வட்டார வேளாண் உதவி இயக்குநா் முரளிராகினி தலைமை வகித்தாா். கீழ்குளம் பேரூராட்சி செயல் அலுவலா் ரகுநாதன் முன்னிலை வகித்தாா்.
கிள்ளியூா் வட்டார விவசாய ஆலோசனைக்குழுத் தலைவா் கோபால் பனை விதைகளை விதைத்து முகாமைத் தொடக்கிவைத்தாா். தொடா்ந்து, பேரூராட்சிக்கு உள்பட்ட இனயம்திருப்பு, வில்லாரிவிளை, செந்தறை, தொழிக்கோடு பகுதிகளில் பனை விதைகள் விதைக்கப்பட்டன. வழக்குரைஞா் ஜெபா ஜாண், வேளாண் அலுவலா் சஜிதா, விவசாய ஆலோசனைக்குழு உறுப்பினா்கள் எஸ்.எம். கான், லாசா், துரைராஜ் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...