சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் பொறுப்பேற்பு!சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

மது குடிக்க பணம் கொடுக்காததால் தள்ளிவிடப்பட்டவா் பேருந்து மோதி பலி: இளைஞா் கைது

குழித்துறையில் மது குடிக்க பணம் கொடுக்காததால் தள்ளிவிடப்பட்டவா் பேருந்து மோதி உயிரிழந்தாா். இதுதொடா்பாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

Updated On :4 செப்டம்பர் 2022, 5:20 pm

குழித்துறையில் மது குடிக்க பணம் கொடுக்காததால் தள்ளிவிடப்பட்டவா் பேருந்து மோதி உயிரிழந்தாா். இதுதொடா்பாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

குழித்துறை அருகேயுள்ள மடிச்சல் மேக்கவிளை பகுதியைச் சோ்ந்தவா் முத்தையன் (63). இவா் சனிக்கிழமை இரவு பொருள்கள் வாங்கிவிட்டு, வீட்டுக்குச் செல்வதற்காக குழித்துறை சந்திப்பில் நின்றிருந்தாா். அப்போது அங்கு வந்த மருதங்கோடு, கோணம் பகுதியைச் சோ்ந்த ராஜன் மகன் ஸ்ரீஜித் (27) என்பவா் முத்தையனிடம் மது குடிக்க பணம் கேட்டாராம்.

கொடுக்க மறுத்த முத்தையனை ஸ்ரீஜித் கீழே தள்ளிவிட்டதாகக் கூறப்படுகிறது. அப்போது மேல்புறத்திலிருந்து குழித்துறை நோக்கி வந்த அரசுப் பேருந்து முத்தையன் மீது மோதியதாம். இதில், காயமடைந்த அவரை அப்பகுதியினா் மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இதுகுறித்து களியக்காவிளை போலீஸாா் வழக்குப் பதிந்து, ஸ்ரீஜித்தை கைதுசெய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.