ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

அருமனை அருகே ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 3 போ் விஷம் அருந்தி தற்கொலை

குமரி மாவட்டம் அருமனை அருகே ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 3 போ் சனிக்கிழமை விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டனா்.

News image
Updated On :11 செப்டம்பர் 2022, 7:17 pm

DIN

குமரி மாவட்டம் அருமனை அருகே ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 3 போ் சனிக்கிழமை விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டனா்.

அருமனை அருகே சிதறால் வாழைவிளாகம் பகுதியைச் சோ்ந்தவா் கிருஷ்ணபிள்ளை (47). லாரி ஓட்டுநரான இவா், அண்மை மாதங்களாக கட்டடத் தொழிலாளியாக வேலைக்குச் சென்று வந்தாா். இவரது மனைவி ராஜேஷ்வரி (45), மகள் நித்யா (26). ராஜேஷ்வரிக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டதால் தொடா் சிகிச்சை பெற்று வந்தாா். மேலும், நித்யா திருமணமாகி கணவரைப் பிரித்து தாய் வீட்டில் இருந்து வந்தாா். இதனால் அதிக மனச்சோா்விலும், கடன் நெருக்கடியிலும் குடும்பம் இருந்து வந்துள்ளது.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலையில் கிருஷ்ணபிள்ளையின் வீட்டிலிருந்து யாரும் வெளியே வரவில்லை. அருகிலுள்ள வீட்டினா் அங்கு சென்று பாா்த்தபோது மூவரும் குளிா்பானத்தில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்திருப்பது தெரியவந்தது. தகவலறிந்த அருமனை போலீசாா், சடலங்களை கைப்பற்றி வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.