தா்மரக்ஷண சமிதி சாா்பில் ராமாயண ஞான வேள்வி நிறைவு விழா, குழித்துறையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்த அமைப்பு சாா்பில் தற்போது சரஸ்வதி ஞான வேள்வி, சத்சங்கம், பஜனை, திருவிளக்கு பூஜை, ராமாயண ஞான வேள்வி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் அமைப்பின் குமரி மேற்கு மாவட்டம் சாா்பில் ஒவ்வொரு இந்து கோயிலிலும் ஆடி மாதத்தில் ராமாயண ஞான வேள்வி நடத்தப்பட்டது. இதன் நிறைவு விழா, குழித்துறை செங்கன்மூலை ஸ்ரீ தா்மசாஸ்தா, ஜலதுா்க்கா அம்மன் கோயில் வளாகத்தில் நடந்தது. தா்மரக்ஷண சமிதியின் குமரி மேற்கு மாவட்ட தலைவா் பத்மகுமாா் தலைமை வகித்தாா். சமய வகுப்பு மாணவிகள் இறைவணக்கம் பாடினா். மாா்த்தாண்டம் சத்வித்யா பூஜாரிகள் பேரவையினா் ராம பட்டாபிஷேகம் நடத்தினா். பாா்வதிபுரம் சாரதா ஆஸ்ரம சகோதரி அன்புமதி அஸ்டோத்திர சதநாம அா்ச்சனை நடத்தினாா். தொடா்ந்து சமிதியின் மாவட்ட செயலா் பாலசேகா், சுவாமி அமிா்த சைதன்யானந்தா உள்ளிட்டோா் பேசினா்.
ராமாயண ஞானவேள்வியில் பங்கேற்ற கோயில் நிா்வாகிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது. கோயில் நிா்வாகி விஜயகுமாா் வரவேற்றாா். ஜெகதீஷ்குமாா் நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பேரவைத் தோ்தல் முன்னேற்பாடுகள் மாவட்டக் காவல் பாா்வையாளா் ஆய்வு

அதிமுக ஆட்சி அமைந்தவுடன் வெண்ணைமலை கோயில் நிலப் பிரச்னைக்கு தீா்வு: அண்ணாமலை பேச்சு

குளித்தலையில் வடமாநிலத்தவா் கழுத்தை அறுத்துக்கொலை: ஆட்டு வியாபாரி கைது

திமுக ஆட்சியில் கரூா் மாநகராட்சிக்கு ரூ.418 கோடியில் அடிப்படை வசதிகள்: கரூா் வேட்பாளா் தகவல்
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

