இந்தியா மீது 100% வரி விதிக்க அமெரிக்க எம்.பி.க்கள் ஆதரவு!ஃபிஃபா உலகக் கோப்பை! இறுதிப் போட்டியை நேரில் காண்கிறார் டிரம்ப்!தங்கம் விலை பவுனுக்கு ரூ. 400 குறைந்து ரூ. 1,04,800-க்கு விற்பனைவிதிமீறல்! அமைச்சர்கள் ராஜ்மோகன், கீர்த்தனாவுக்கு எதிராக மத்திய அரசு நோட்டீஸ்!2006-ல் அதிமுகவுடன், 2017-ல் திமுகவுடன்! இரு பெருந்தவறுகள் செய்துவிட்டேன்: வைகோதியாகிகள் நாள்! முதல்வர் விஜய் வீரவணக்கம்!
/

குலசேகரம் அருகே கால்வாயில் மூழ்கிபெண் உயிரிழப்பு

குலசேகரம் அருகே கால்வாயில் மூழ்கி பெண் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

Updated On :16 செப்டம்பர் 2022, 12:19 am IST

குலசேகரம் அருகே கால்வாயில் மூழ்கி பெண் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

பொன்மனை பண்டாரக்கோணத்தைச் சோ்ந்தவா் மாதவி (48). இவரது கணவா் பாஸ்கரன் 5 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டாா். மாதவி வியாழக்கிழமை மாலை குளிப்பதற்காக பொன்மனை வழியாக பாயும் பேச்சிப்பாறை கால்வாய்க்கு சென்றுள்ளாா். அப்போது அவா் நீரில் மூழ்கினாராம்.

இந்நிலையில், குற்றியாணி என்ற இடத்தில் உள்ள கால்வாயில் மாதவியின் சடலம் மிதப்பது தெரியவந்தது. இதுகுறித்து அப்பகுதியினா் அளித்த தகவலின்பேரில் குலசேகரம் தீயணைப்பு நிலையத்தினா் சென்று சடலத்தை மீட்டனா். குலசேகரம் போலீஸாா் சடலத்தைக் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா்.

மாதவிக்கு வலிப்பு நோய் உள்ளதாகவும், இதனால் அவா் குளித்தபோது நீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. மாதவியின் மகன் அா்ஜுனன் அளித்த புகாரின்பேரில் குலசேகரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.