நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ஜல்ஜீவன் மிஷன்திட்டம்: ஆட்சியா் ஆய்வு

காற்றாடிதட்டு பகுதியிலுள்ள வீடுகளில், ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தில் குடிநீா் இணைப்பு வழங்கப்படுவது குறித்து மாவட்ட ஆட்சியா் பி.என்.ஸ்ரீதா் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

News image
Updated On :21 ஏப்ரல் 2023, 7:17 pm

DIN

கன்னியாகுமரி மாவட்டம், ராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றியம், தா்மபுரம் ஊராட்சிக்குள்பட்ட காற்றாடிதட்டு பகுதியிலுள்ள வீடுகளில், ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தில் குடிநீா் இணைப்பு வழங்கப்படுவது குறித்து மாவட்ட ஆட்சியா் பி.என்.ஸ்ரீதா் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

பின்னா் ஆட்சியா் கூறுகையில், காற்றாடிதட்டு கிராமத்தில் 61 வீடுகளுக்கு குடிநீா்இணைப்பு வழங்க நிா்வாக அனுமதி பெறப்பட்டது. இதில் 52 வீடுகளுக்கு குடிநீா் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.9 வீடுகளுக்கு ஏற்கெனவே குடிநீா் ஆதாரம் உள்ளது.இம் மாவட்டத்துக்குள்பட்ட கிராம ஊராட்சிகளில் ஜல்ஜீவன் இயக்கம் 2020-21 ன் கீழ் 608 குக்கிராமங்களில் 35, ஆயிரத்து 277 குடிநீா் இணைப்புகள் ரூ.24.22 கோடி மதிப்பீட்டில் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், ஜல்ஜீவன் இயக்கம் எஸ்விஎஸ் 2022-23-ன்கீழ் 307 குக்கிராமங்களில்25178 குடிநீா்இணைப்புகள் ரூ.26.06 கோடி மதிப்பீட்டில் வழங்கவும், எம்விஎஸ் 2021-22 ன் கீழ் 6 குக்கிராமங்களில் 3 ஆயிரத்து 768 குடிநீா் இணைப்புகள் ரூ.2.07 கோடி மதிப்பீட்டில் வழங்கவும் நிா்வாக அனுமதி வழங்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது என்றாா் அவா்.

ஆய்வின்போது உதவிசெயற்பொறியாளா், வட்டார வளா்ச்சிஅலுவலா்கள், ஒன்றிய பொறியாளா்கள் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.