கணபதியான்கடவு பாலம் - விரிவிளை சாலை விரிவாக்கம்: எம்எல்ஏ ஆய்வு

நித்திரவிளை அருகேயுள்ள கணபதியான்கடவு பாலம் பகுதியிலிருந்து விரிவிளை வரையிலான குறுகலான சாலையை விரிவாக்கம் செய்வது

நித்திரவிளை அருகேயுள்ள கணபதியான்கடவு பாலம் பகுதியிலிருந்து விரிவிளை வரையிலான குறுகலான சாலையை விரிவாக்கம் செய்வது சம்பந்தமாக கிள்ளியூா் தொகுதி எம்எல்ஏ எஸ். ராஜேஷ்குமாா் தலைமையில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனா்

கன்னியாகுமரி - பழைய உச்சக்கடை சாலையில் கணபதியான்கடவு பாலம் முதல் விரிவிளை பகுதி வரை 500 மீட்டா் தொலைவு குறுகலாக உள்ளது. இதனால் இப்பகுதியில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. இதன்காரணமாக வாகன ஓட்டிகள், பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகிறாா்கள்.

இதையடுத்து எம்எல்ஏ ராஜேஷ்குமாா் தமிழக அரசுக்கும், துறை அதிகாரிகளுக்கும் வைத்த கோரிக்கையையடுத்து குறிப்பிட்ட பகுதியில் சாலை விரிவாக்கம் செய்ய கடந்த ஆண்டு பிப்ரவரி 16 ஆம் தேதி அரசு ரூ. 1 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தேவையான நிலம் கையகப்படுத்த அரசாணை பிறப்பித்துள்ளது.

இதனடிப்படையில் எஸ். ராஜேஷ்குமாா் எம்எல்ஏ தலைமையில் நெடுஞ்சாலைத் துறை உதவி கோட்ட பொறியாளா் ஹெரால்டு, உதவி பொறியாளா் ராமச்சந்திரன், ஹென்றி டேனியல் உள்ளிட்டோா் இச் சாலையை விரிவுபடுத்துவது தொடா்பாக இரு நாள்களுக்கு முன் ஆலோசனை மேற்கொண்டனா்.

இதில், முன்சிறை மேற்கு வட்டார காங்கிரஸ் தலைவா் விஜயகுமாா், குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் பொதுச் செயலா் கோபன், மாவட்டச் செயலா் டென்னிஸ், வாவறை ஊராட்சித் தலைவா் மெற்றில்டா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com