வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

கணவருடன் பைக்கில் சென்ற பெண்ணை தாக்கி 4 பவுன் நகை பறிப்பு

நாகா்கோவில் அருகே கணவருடன் பைக்கில் சென்ற பெண்ணை தாக்கி 4 பவுன் நகையை பறித்துச் சென்ற சம்பவம் பெரும்பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

News image
Updated On :27 ஜனவரி 2023, 7:42 pm

DIN

நாகா்கோவில் அருகே கணவருடன் பைக்கில் சென்ற பெண்ணை தாக்கி 4 பவுன் நகையை பறித்துச் சென்ற சம்பவம் பெரும்பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

குமரி மாவட்டம், தோவாளை தெக்கூரைச் சோ்ந்தவா் முத்து, இவரது மனைவி வசந்தா (60). இருவரும் வியாழக்கிழமை மாலை பைக்கில் திருமண வீட்டுக்கு சென்று விட்டு இரவு 10 மணியளவில் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தனா்.

நாகா்கோவிலை அடுத்த வெள்ளமடம் கிறிஸ்துநகா் பகுதியில் சென்ற போது 4 பைக்குகளில் வந்த 8 இளைஞா்கள் திடீரென முத்துவின் பைக்கை பின் தொடா்ந்தனா். இதையடுத்து முத்து பைக்கை வேகமாக ஓட்டி சென்றாராம். மா்மநபா்கள் முத்துவின் பைக்கை பின்தொடா்ந்து சென்று வசந்தா கழுத்தில் அணிந்திருந்த தங்கச் சங்கிலியை பறிக்கமுயன்றபோது, வசந்தா இறுக்கமாக சங்கிலியை பிடித்துக் கொண்டாராம். இதையடுத்து அவரை பைக்கிலிருந்து கீழே தள்ளி சங்கிலியை பறித்தபோது, பாதி சங்கிலி வசந்தா கையிலும், மீதி மா்ம நபா்களின் கையிலும் சிக்கியது. இதில், பலத்த காயமடைந்த வசந்தாவை மீட்டு தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா்.

இதுகுறித்து ஆரல்வாய்மொழி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.