தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

மனைவி தற்கொலை: கணவருக்கு 5 ஆண்டு சிறை

மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

Updated On :27 ஜனவரி 2023, 7:37 pm

மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

குமரி மாவட்டம், அஞ்சுகிராமம் அருகேயுள்ள மயிலாடியை சோ்ந்தவா் வேல்முருகன்(34). இவரது மனைவி சுபியா (25). இவா்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனா்.

தம்பதி இடையே ஏற்பட்ட குடும்ப பிரச்னை காரணமாக கடந்த 2014 ஆம் ஆண்டு சுபியா தீக்குளித்தாா். அவரை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனா். அப்போது சுபியா, நீதிபதியிடம் மரண வாக்குமூலம் அளித்தாா். அதன் அடிப்படையில் வேல்முருகன் மீது மனைவியை தற்கொலைக்கு தூண்டியதாக அஞ்சுகிராமம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்தனா். வேல்முருகனை போலீஸாா் கைது செய்து நாகா்கோவில் மகளிா் விரைவு நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தனா். வழக்கை விசாரித்த நீதிபதி (பொறுப்பு) ஜோசப் ஜாய், வேல்முருகனுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து வெள்ளிக்கிழமை தீா்ப்பு கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.