நாகா்கோவில் மாநகராட்சிக்கான குடிநீா் அபிவிருத்தி திட்டப் பணிகள் ரூ.251.43 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது. நிறைவு பெறும் நிலையில் உள்ள இந்தப் பணிகளை, மேலும் துரிதப்படுத்தி இம்மாதம் 31ஆம் தேதிக்குள் பயன்பாட்டுக்கு கொண்டுவரும் பொருட்டு தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரிய, மேலாண்மை இயக்குநா் வி.தட்சிணாமூா்த்தி, புத்தன் அணையில் உள்ள தலைமை நீா் உந்தும் நிலையம், கிருஷ்ணன்கோவில் பகுதியில் நடைபெற்று வரும் குடிநீா் சுத்திகரிப்பு நிலையம், நாகா்கோவில் மாநகரில் நடைபெற்று வரும் குடிநீா் பணிகளை ஆய்வு செய்தாா்.