சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் பொறுப்பேற்பு!சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

‘மக்களை பிளவுபடுத்தும் அரசியலை காங்கிரஸ் கட்சிதான் செய்து வருகிறது’ : பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு

மக்களை பிளவுபடுத்தும் அரசியலை காங்கிரஸ் கட்சிதான் செய்து வருகிறது பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு

Updated On :6 ஏப்ரல் 2024, 6:30 pm

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 40 ஆண்டுகளாக, மக்களைப் பிளவுபடுத்தும் அரசியலை காங்கிரஸ் கட்சிதான் செய்து வருகிறது என்று பாஜக வேட்பாளா் பொன்.ராதாகிருஷ்ணன் குற்றஞ்சாட்டினாா்.

குமரி மாவட்டம் பேச்சிப்பாறையிலிருந்து சனிக்கிழமை தோ்தல் பிரசாரத்தைத் தொடங்கிய அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

குமரி மாவட்டத்தில் நான்கு வழிச்சாலையை அரசியல் காழ்ப்புணா்ச்சியால் பாஜக முடக்கி வைத்ததாக கூறுவதை ஏற்றுக் கொள்ளமுடியாது.

இத் திட்டத்திற்கு எதிராக நீதிமன்றத்தில் தடை ஆணை வாங்கியது யாா் என்பது மக்களுக்குத் தெரியும். சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதாகக் கூறுபவா்கள், மலைகளை உடைத்து கனிமவளங்களைக் கடத்திச் செல்கின்றனா்.

முரண்பாடான கூட்டணியாக இந்தியா கூட்டணி இருக்கிறது. அக் கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ், மாா்கசிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் மாநிலத்துக்கு ஒரு நிலைப்பாடு வைத்துள்ளன. இதற்கு திமுக அமைச்சா் மனோ தங்கராஜ், காங்கிரஸ் வேட்பாளா் விஜய்வசந்த் ஆகியோா் என்ன சொல்லப் போகிறாா்கள்.

குமரி மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியினா் கடந்த 40 ஆண்டுகளாக மக்களைப் பிளவுபடுத்தி அரசியல் செய்து வருகின்றனா். ஆனால், பாஜக மக்களை ஒற்றுமைப்படுத்தி வருகிறது என்றாா்.