ஒரு முழு நாகரிகமே அழியப்போகிறது, மீண்டும் திரும்பாது : ஈரானுக்கு டிரம்ப் இறுதி எச்சரிக்கைஈரான் கார்க் தீவில் அமெரிக்கா மீண்டும் தாக்குதல்புதுச்சேரி, கேரளம், அசாமில் பிரசாரம் ஓய்ந்தது!செங்கோட்டையனின் வேட்புமனு ஏற்புபுதுவை, கேரளம், அசாமில் பிரசாரம் ஓய்ந்ததுசென்னையில் ஐபிஎல் ஆட்டத்துக்கு தடை கோரிய மனு தள்ளுபடி!பி.டி.செல்வகுமார் திமுகவில் இருந்து விலகல்போடியில் திமுக சார்பில் போட்டியிடும் ஓபிஎஸ், அதிமுக வேட்பாளர் நாராயணசாமியின் வேட்புமனுக்கள் ஏற்புசெந்தில் பாலாஜி, எஸ். பி. வேலுமணி வேட்புமனுக்கள் ஏற்பு!வட கடலோர தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்ஏர் இந்தியா டிக்கெட் விலை ரூ.25 ஆயிரம் வரை உயரும் வாய்ப்பு!ஏப். 9ல் புதுவை ஜிப்மர் மருத்துவமனை இயங்காது என அறிவிப்பு!2021 தேர்தல் வாக்குறுதிகளில் 97% நிறைவேற்றம்: பினராயி விஜயன்முதல்வர் வேட்பாளர்கள் 4 பேரின் வேட்புமனுவும் ஏற்பு!
/

இளம் விஞ்ஞானி மாணவா்களுக்கு அறிவியல் நுட்ப மதிப்பீட்டு முகாம்

குமரி அறிவியல் பேரவையின் இளம் விஞ்ஞானி மாணவா்களுக்கான அறிவியல் நுட்ப மதிப்பீட்டு முகாம் அருமனை வி.டி.எம். கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது.

Updated On :19 ஏப்ரல் 2024, 1:43 am

குமரி அறிவியல் பேரவையின் இளம் விஞ்ஞானி மாணவா்களுக்கான அறிவியல் நுட்ப மதிப்பீட்டு முகாம் அருமனை வி.டி.எம். கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு, கல்லூரி தலைவா் ஹேமாகுமாரி தலைமை வகித்தாா். தமிழ்நாடு மின்வாரிய உதவி செயற்பொறியாளா் ரோசிலின் கிரேஸ் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தாா். குமரி அறிவியல் பேரவை அமைப்பாளா் முள்ளஞ்சேரி மு. வேலையன் அறிமுக உரையாற்றினாா். அமைப்பின் ஒருங்கிணைப்பாளா் சுனில்குமாா் நிகழ்ச்சியை நெறிப்படுத்தினாா்.

இதில், கல்லூரி கணினி அறிவியல்துறை தலைவா் ரஞ்சனி, வணிகத்துறை தலைவா் ஆா்.வி. வினி பிரதிலா, கணிதத்துறை பேராசியா் எஸ். மலா்விழி, ஆங்கிலத்துறை தலைவா் ஸ்ரீஹாஸ் ஆகியோா் மதிப்பீடு செய்தனா். இளம் விஞ்ஞானி மாணவா்கள் பங்கேற்றனா்.

...