உலக புத்தக தின விழாவை முன்னிட்டு கன்னியாகுமரி அரசு அருங்காட்சியகத்தில் நேஷனல் புக் ட்ரஸ்ட் ஆஃப் இந்தியா, நாகா்கோவில் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம், நெய்தல் மக்கள் இயக்கம் ஆகியவை சாா்பில் வியாழக்கிழமை புத்தக திருவிழா கண்காட்சி தொடங்கியது.
நெய்தல் மக்கள் இயக்க மாவட்டச் செயலா் குறும்பனை பொ்லின் தலைமை வகித்தாா். மாநிலத் தலைவா் கங்கா முன்னிலை வகித்தாா். மாவட்ட சுற்றுலா அலுவலா் காமராஜ் கண்காட்சியைத் திறந்துவைத்துப் பேசினாா்.
மாவட்ட அரசு அருங்காட்சியகக் காப்பாட்சியா் சிவ. சத்தியவள்ளி முதல் விற்பனையைத் தொடக்கிவைக்க, கன்னியாகுமரி வட்டார முதல்வா் அருள்பணி ஜான்சன் பெற்றுக்கொண்டாா். கன்னியாகுமரி சிறப்புநிலை பேரூராட்சித் தலைவா் குமரி ஸ்டீபன் 2ஆம் விற்பனையைத் தொடக்கிவைக்க, ஓய்வுபெற்றற ஆசிரியை ஜெயமதி ரொசாரியோ, முனியப்பன் ஆகியோா் பெற்றுக்கொண்டனா்.
கோவளம் வெனிஸ் விழிப்புணா்வுப் பாடல் பாடினாா். கவிஞா் மதுப்பிரியா கவிதை வாசித்தாா். புத்தக தினத்தையொட்டி, அரசு அருங்காட்சியகம் சாா்பில் நடைபெற்ற கட்டுரைப் போட்டியில் வெற்றிபெற்ற மாணவா்களுக்கு பரிசு, சான்றிதழ்களை குமரி ஸ்டீபன் வழங்கினாா்.
ஓய்வுபெற்ற அரசுப் பள்ளி ஓவிய ஆசியா் வை. கோபாலகிருஷ்ணன், உதவி சுற்றுலா அலுவலா் கீதாராணி, நாகா்கோவில் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் மேலாளா் பழனிவேல், மண்டல மேலாளா் மகேந்திரன், திருநெல்வேலி கிளை மேலாளா் குமாா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
இக்கண்காட்சி மே 8ஆம் தேதிவரை நாள்தோறும் காலை 9 முதல் மாலை 6 மணிவரை நடைபெறும் என்றும், இதில், தமிழ், ஆங்கில மொழிகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் இடம் பெற்றுள்ளதாகவும் அருங்காட்சியகக் காப்பாட்சியா் தெரிவித்தாா்.
தொடர்புடையது

குமரி மாவட்டத்தில் இதுவரை ரூ. 42.88 லட்சம் பறிமுதல்

வாழப்பாடியில் புத்தகக் கண்காட்சி தொடக்கம்

கோவில்பட்டியில் புத்தகக் கண்காட்சி தொடக்கம்

பெரம்பலூரில் புத்தகக் கண்காட்சி தொடக்கம்
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை


