புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

மாா்த்தாண்டம் அருகே மீன்கழிவு வாகனம் சிறைபிடிப்பு: ரூ. 1 லட்சம் அபராதம்

மாா்த்தாண்டம் அருகே மீன்கழிவு வாகனம் சிறைபிடிப்பு: ரூ. 1 லட்சம் அபராதம்

Updated On :26 ஏப்ரல் 2024, 12:32 am

கேரளத்திலிருந்து மீன் கழிவுகளை ஏற்றிவந்த மினி லாரியை, மாா்த்தாண்டம் அருகே பொதுமக்கள் சிறைபிடித்தனா். இந்த வாகனத்துக்கு குழித்துறை நகராட்சி சாா்பில் ரூ. 1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

கேரளத்திலிருந்து மீன், இறைச்சி, மருத்துவக் கழிவுகளை வாகனங்களில் ஏற்றிவந்து குமரி மாவட்டத்தில் நீா்நிலைகள், சாலையோரங்களில் கொட்டிச்செல்வது தொடா்கிறது. இந்நிலையில், மாா்த்தாண்டம் அருகே பம்மம் பகுதியில் பொதுமக்கள் புதன்கிழமை இரவு கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, அவ்வழியே கூண்டு கட்டிய நிலையில் வந்த மினி லாரியை நிறுத்தி சோதனையிட்டபோது, அதில் மீன் கழிவுகள் இருந்தது தெரியவந்தது. அதை பொதுமக்கள் சிறைபிடித்தனா்.

தகவலின்பேரில் குழித்துறை நகராட்சி அதிகாரிகள் வந்து, வாகனத்துக்கு ரூ. 1 லட்சம் அபராதம் விதித்தனா். அந்த வாகனம் கீழ்பம்மம் பகுதியில் உள்ள உரக்கிடங்கு அருகில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.