4 தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் மதிமுக போட்டி! புதுவை விஜய் பிரசாரத்துக்கு 19 இடங்களில் அனுமதி மறுப்பு! அமெரிக்க, இஸ்ரேல் இலக்குகளை குறிவைத்து ஈரான் கடும் தாக்குதல்உள்ளூர் வேட்பாளர் வேண்டுமா? இறக்குமதி செய்த வேட்பாளர் வேண்டுமா? வேலுமணி பிரசாரம்தேர்தல் நேரம்! வாக்காளர் அட்டை அப்டேட் என்ற பெயரில் எஸ்எம்எஸ் வந்தால்?!ஏப். 3 முதல் தென் மாவட்டங்களில் மு.க. ஸ்டாலின் பிரசாரம்! உள்நாட்டு உற்பத்தி இயற்கை எரிவாயு விலையை உயா்த்தி மத்திய அரசு நடவடிக்கை
/

பஞ்சாப் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயருக்கு ரூ. 12 லட்சம் அபராதம்!

பஞ்சாப் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயருக்கு அபராதம் விதிக்கப்பட்டது பற்றி...

News image

ஷ்ரேயாஸ் ஐயர்

ANI

Updated On :1 ஏப்ரல் 2026, 5:51 am

இணையதளச் செய்திப் பிரிவு

குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி தாமதமாக பந்து வீசியதற்காக அந்த அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயருக்கு ரூ. 12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 2026-ஆம் ஆண்டு சீசனின் லீக் ஆட்டத்தில் செவ்வாய்க்கிழமை பஞ்சாப் கிங்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின.

இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் டைட்டன்ஸ் 162 ரன்கள் எடுத்தது. அடுத்து, 163 ரன்கள் இலக்கை விரட்டிய பஞ்சாப் கிங்ஸ் 7 விக்கெட்களை இழந்து 19.1 ஓவர்களில் 165 ரன்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த நிலையில், பஞ்சாப் கிங்ஸ் அணி தாமதமாக பந்துவீசியதற்காக ஐபிஎல் நடத்தை விதியின் பிரிவு 2.22-இன் கீழ், இந்த சீசனில் முதல்முறையாக விதிமீறலில் ஈடுபட்டதற்காக அணியின் கேப்டன் ஷ்ரேயாஸுக்கு ரூ. 12 லட்சம் அபராதம் விதிக்கப்படுவதாக ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது.

இந்த சீசன் தொடங்கியதில் இருந்து தாமதமாக பந்துவீசியதற்காக அபராதம் விதிக்கப்பட்ட முதல் வீரர் ஷ்ரேயாஸ் ஐயர் ஆவார்.

ஷ்ரேயாஸ் ஐயருக்கு அபராதம் விதிக்கப்படுவது இது முதல்முறை அல்ல. கடந்தாண்டு ஐபிஎல் தொடரில் தாமதமாக பந்துவீசியதற்காக ரூ. 12 லட்சம், ரூ. 24 லட்சம் என இருமுறை அபராதம் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.