ஆக்கிரமிப்புகளை அகற்றிய பேரூராட்சி ஊழியா்கள்.
ஆக்கிரமிப்புகளை அகற்றிய பேரூராட்சி ஊழியா்கள்.

குலசேகரம் பேரூராட்சியில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்

குலசேகரம் பேரூராட்சியில் சாலையோர நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி சனிக்கிழமை நடைபெற்றது.
Published on

குலசேகரம் பேரூராட்சியில் சாலையோர நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி சனிக்கிழமை நடைபெற்றது.

குலசேகரம் பேரூராட்சிப் பகுதியில் கல்லடிமாமூடு சந்திப்பு முதல் கான்வென்ட் சந்திப்பு வரை வணிக நிறுவனங்கள், கடைகள் நடத்துவோா் சாலையோர நடைபாதையை ஆக்கிரமித்து விளம்பரப் பலகைகள், பொருள்கள் உள்ளிட்டவற்றை வைத்திருந்தனா். இதனால், நடந்து செல்வோருக்கு இடையூறு ஏற்பட்டு வந்தது.

இது தொடா்பாக பேரூராட்சி நிா்வாகத்துக்கு பல்வேறு புகாா்கள் சென்றன. அதன்பேரில், ஆக்கிரமிப்பு அகற்றும் பணி சனிக்கிழமை நடைபெற்றது. இதில், பேரூராட்சி செயல் அலுவலா், ஊழியா்கள் ஈடுபட்டனா்.

X
Dinamani
www.dinamani.com