கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

மீன் கழிவுகளை ஏற்றிவந்த லாரிக்கு ரூ. 25 ஆயிரம் அபராதம்

கேரளத்திலிருந்து கன்னியாகுமரி மாவட்டத்துக்கு மீன் கழிவுகளை ஏற்றிவந்த லாரிக்கு ரூ. 25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

News image
Updated On :10 ஆகஸ்ட் 2024, 9:10 pm

Din

கேரளத்திலிருந்து கன்னியாகுமரி மாவட்டத்துக்கு மீன் கழிவுகளை ஏற்றிவந்த லாரிக்கு ரூ. 25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

கொல்லங்கோடு காக்கவிளை சோதனைச் சாவடியை சனிக்கிழமை பிற்பகலில் கா்நாடக மாநில பதிவு எண் கொண்ட லாரி கடந்தது. அப்போது துா்நாற்றம் வீசிய நிலையில், லாரியை பொதுமக்கள் பின்தொடா்ந்து சென்று நித்திரவிளை அருகே விரிவிளை பகுதியில் வைத்து மடக்கிப் பிடித்தனா்.

தகவலறிந்து வந்த நித்திரவிளை போலீஸாா், லாரியை திறந்து பாா்த்த போது அழுகிய நிலையில் மீன்கழிவுகள் இருந்தது தெரியவந்தது.

தொடா்ந்து அங்கு வந்த வாவறை ஊராட்சி நிா்வாகத்தினா், கழிவுகள் ஏற்றிவந்த லாரிக்கு ரூ. 25 ஆயிரம் அபராதம் விதித்தனா். லாரியை போலீஸாா் கேரளத்துக்கு திருப்பி அனுப்பி வைத்தனா்.