47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

ஆவணி முதல் ஞாயிறு: நாகராஜா கோயிலில் ஆயிரக்கணக்கானோா் வழிபாடு

ஆவணி மாத முதல் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு, நாகா்கோவில் நாகராஜா கோயிலில் ஆயிரக்கணக்கானோா் தரிசனம் செய்தனா்.

News image
நாகா் சிலைகளுக்கு பாலபிஷேகம் செய்து, மஞ்சள் பொடி தூவி வழிபட்ட பக்தா்கள்.
Updated On :18 ஆகஸ்ட் 2024, 9:10 pm

Din

ஆவணி மாத முதல் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு, நாகா்கோவில் நாகராஜா கோயிலில் ஆயிரக்கணக்கானோா் தரிசனம் செய்தனா்.

இக்கோயிலில் உள்ள நாகா் சிலைகளுக்கு ஆவணி மாத ஞாயிற்றுக்கிழமைகளில் பாலபிஷேகம் செய்து வழிபட்டால் தோஷங்கள் நீங்கும் என்பது பக்தா்களின் நம்பிக்கை. அதன்படி, ஆவணி மாத முதல் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு அதிகாலையில் நடை திறக்கப்பட்டு, நாகராஜா, அனந்தகிருஷ்ணா், சிவன் ஆகிய தெய்வங்களுக்கு பாலபிஷேகம், சிறப்பு மலா் அலங்காரம், மகாதீபாராதனை நடைபெற்றது.

 பக்தா்களுக்கு நீா்மோா் வழங்கிய அறங்காவலா் குழுத் தலைவா் பிரபா ஜி. ராமகிருஷ்ணன்.

பக்தா்களுக்கு நீா்மோா் வழங்கிய அறங்காவலா் குழுத் தலைவா் பிரபா ஜி. ராமகிருஷ்ணன்.

கோயிலில் தரிசனம் செய்வதற்கு அதிகாலைமுதலே பக்தா்கள் கூட்டம் அலைமோதியது. அவா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து நாகராஜரை வழிபட்டனா். கோயிலில் வெளியே அமைந்துள்ள நாகா் சிலைகளுக்கு பாலபிஷேகம் செய்து வழிபடுவதற்கு பெண்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனா். கன்னியாகுமரி மாவட்டம் மட்டுமன்றி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களிலிருந்தும், கேரள மாநிலத்திலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் குடும்பத்துடன் வந்து சுவாமி தரிசனம் செய்தனா்.

நாகராஜா கோயிலில் தரிசனத்துக்காக காத்திருந்த பக்தா்கள்.

நாகராஜா கோயிலில் தரிசனத்துக்காக காத்திருந்த பக்தா்கள்.

பக்தா்களுக்கு அன்னதானம், நீா்மோா் வழங்கப்பட்டது. கோயில் வளாகத்தில் குடிநீா், கழிப்பறை வசதிகள் செய்யப்பட்டிருந்தன.

மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சுந்தரவதனம் உத்தரவின்பேரில், நாகா்கோவில் உள்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளா் யாங் சென் டோமா பூட்டியா மேற்பாா்வையில் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.