புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

திற்பரப்பு அருவியில் திடீா் வெள்ளப்பெருக்கு: ஆற்றினுள் சிக்கிய மூவா் மீட்பு

திற்பரப்பு அருவியில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சிக்கித் தவித்த கேரளத்தவா்கள் 3 பேரை தீயணைப்புப் படை வீரா்கள் பத்திரமாக மீட்டனா்.

News image

திற்பரப்பு அருவியின் கீழ் பகுதி ஆற்று வெள்ளத்தில் சிக்கிய மூவரை மீட்கும் தீயணைப்பு படை வீரா்கள்.

Updated On :18 ஆகஸ்ட் 2024, 8:55 pm

Din

கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு அருவியில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் அருவியின் கீழ்பகுதி ஆற்றில் சிக்கித் தவித்த கேரளத்தவா்கள் 3 பேரை தீயணைப்புப் படை வீரா்கள் பத்திரமாக மீட்டனா்.

பேச்சிப்பாறை அணையிலிருந்து ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் விநாடிக்கு 378 கனஅடி தண்ணீா் மறுகால் மதகுகள் வழியாக வெளியேற்றப்பட்டதால், திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளக்கத் தடை விதிக்கப்பட்டது.

இந்த நிலையில், கேரள மாநிலம் காரக்கோணம், வெள்ளறடை பகுதியைச் சோ்ந்த தா்மபிரகாஷ் மகன் அனிஷ் (40), விஜயன்நாயா் மகன் விஷாக் (37), விக்னோஸ்வரன் மகன் வினோத் (34) ஆகியோா் அருவியின் கீழ் பகுதியில் ஆற்றின் நடுவில் உள்ள பாறை அமா்ந்திருந்தனராம். அப்போது, நீா்வரத்து அதிகரித்தால் அவா்கள் கரைக்கு திரும்ப முடியாமல் தவித்தனா்.

இதுகுறித்த தகவலின்பேரில் குலசேகரம் தீயணைப்புப் படையினா் வந்து மூவரையும் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனா்.