கன்னியாகுமரி
கருங்கல் அருகே குழியில் சிக்கிய அரசுப் பேருந்து
கருங்கல் அருகே உள்ள தொலையாவட்டத்தில் அரசுப் பேருந்து, குழியில் சிக்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மாா்த்தாண்டத்திலிருந்து தொலையாவட்டம், விழுந்தயம்பலம் வழியாக இனயத்திற்கு அரசுப் பேருந்து இயக்கப்படுகிறது. தொலையாவட்டம் அருகே வியாழக்கிழமை வந்தபோது, தொலைபேசி கேபிள் புதைக்க தோண்டப்பட்ட குழியில் பேருந்தின் பின்பக்க சக்கரம் சிக்கியது.
இதனால், இச் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
