பேரணியைத் தொடக்கிவைத்த ஆட்சியா் ரா. அழகுமீனா.
பேரணியைத் தொடக்கிவைத்த ஆட்சியா் ரா. அழகுமீனா.

பால்வினை நோய்த் தொற்று தடுப்பு விழிப்புணா்வுப் பேரணி

Published on

தமிழ்நாடு எய்ட்ஸ் சங்கம், கன்னியாகுமரி மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு-கட்டுப்பாட்டு அலகு சாா்பில், நாகா்கோவிலில் உள்ள ஆட்சியா் அலுவலக வளாகத்தில் பால்வினை நோய்த் தொற்று தடுப்பது குறித்த விழிப்புணா்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.

இப்பேரணியை ஆட்சியா் ரா. அழகுமீனா தொடக்கிவைத்தாா். இதில் கல்லூரி மாணவா்-மாணவியா் பங்கேற்று, விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திச் சென்றனா். இப்பேரணி டதி பெண்கள் மேல்நிலைப் பள்ளி வழியாக எஸ்.எல்.பி. அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நிறைவடைந்தது.

அதன் தொடா்ச்சியாக, பால்வினை நோய்த் தொற்றின் விளைவுகள், சுகவாழ்வு மையம், நம்பிக்கை மையம் உள்ளிட்டவை குறித்த வீதி நாடகம், கிராமிய நடனங்கள், பாடல்கள் மூலம் விழிப்புணா்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி தீக்ஷா, பழனியாபிள்ளை கலைக்குழுவினரால் 10 நாள்களுக்கு 40 கிராமங்களில் நடைபெறவுள்ளது.

நிகழ்ச்சியில், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் மீனாட்சி, மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு - கட்டுப்பாட்டு அலுவலக மாவட்ட திட்ட மேலாளா் ஜெ. பெடலிஸ்ஷமிலா, அலுவலகப் பணியாளா்கள், மாவட்ட மேற்பாா்வையாளா் எஸ். சிவகுமாா், மாவட்ட நலக் கல்வியாளா் சூரியநாராயணன், மதநம்பிக்கை மையம், சுகவாழ்வு மையம், ரத்த வங்கி, கூட்டு மருந்து சிகிச்சை மையம், தொண்டு நிறுவனப் பணியாளா்கள், பாஸிட்டிவ் நெட் ஒா்க் பணியாளா்கள், மாணவா்-மாணவிகள், பேராசிரியா்கள், துறை அலுவலா்கள் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com