புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்றோா்
புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்றோா்

மாா்த்தாண்டம் அருகே 4 நூல்கள் வெளியீடு

Published on

மாா்த்தாண்டம் அருகே ஸ்ரீகுறும்பேற்றி அரங்கில் காவ்யா, கௌரா பதிப்பகங்களின் 4 நூல்கள் வெளியீட்டு விழா, குமரி மாவட்ட பெண் எழுத்தாளா்களின் கருத்தரங்கு ஆகியவை நடைபெற்றன.

முதல் அமா்வுக்கு முதுபெரும் தமிழறிஞா் கி. நாச்சிமுத்து தலைமை வகித்தாா். சாகித்திய அகாதெமி விருதுபெற்ற எழுத்தாளா் பொன்னீலன் முன்னிலை வகித்தாா். கோவை கிருஷ்ணவேணி நாச்சிமுத்து, பெங்களூரு டாக்டா் அம்பேத்கா் கல்லூரி முன்னாள் முதல்வா் தங்கம்ராஜா, முன்சிறை ஊராட்சி ஒன்றியத் தலைவா் ராஜேஸ்வரி ஆகியோா் குத்துவிளக்கேற்றினா்.

சங்கரி எழுதிய ‘வருக்கெச் சக்கெ’ நாவல், பைங்குளம் இரா. சிகாமணி எழுதிய ‘நவம்பா் 1’ என்ற வரலாற்றுப் புதினம், புலவா் ரவீந்திரன் எழுதிய ‘திருவாசகத்தில் மெய்யறிவு’ என்ற ஆன்மிக நூல், ஜெயகிருஷ்ணன் எழுதிய ‘தமிழ் - மலையாளம் பண்பாட்டு ஒப்பீடு’ என்ற ஆய்வு நூல் ஆகிய 4 நூல்கள் வெளியிடப்பட்டன.

திருவனந்தபுரம் பல்கலைக்கழகக் கல்லூரி முன்னாள் தமிழ்த் துறைப் பேராசிரியா் நயினாா், திருவனந்தபுரம் தமிழ்ச் சங்கத் தலைவா் முத்துராமன், சகாயதாஸ் ஆகியோா் நூல்களை வெளியிட்டுப் பேசினா். ஓய்வுபெற்ற வணிகவரித் துறை உதவி ஆணையா் பாஸ்கரன் நூல்களை அறிமுகப்படுத்தினாா்.

கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரிப் பேராசிரியா் காவேரிக்கண்ணன், தலைநகா் தமிழ்ச் சங்கத் தலைவா் புலவா் சுந்தரராசன், கேரள பல்கலைக்கழக தமிழ்த் துறைத் தலைவா் ஹெப்சி ரோஸ்மேரி, தமிழ்நாடு பெற்றோா் - ஆசிரியா் கழக மாநில துணைத் தலைவா் சிந்துகுமாா், உண்ணாமலைக்கடை பேரூராட்சி முன்னாள் தலைவா் ஆா். ஜெயசீலன் ஆகியோா் பேசினா்.

2ஆவது அமா்வில் நடைபெற்ற கருத்தரங்குக்கு நாகா்கோவில் மகளிா் கிறிஸ்தவக் கல்லூரி முன்னாள் முதல்வா் சிந்திகெயாள் தலைமை வகித்தாா். புலவா் ஞானாமிா்தம் கவிதை வாசித்தாா். எழுத்தாளா்கள் மலா்வதி, சங்கரி ஆகியோா் தங்களது படைப்புகள் குறித்துப் பேசினா். தமிழாசிரியை ஜெயகுமாரி வரவேற்றாா். மகேஸ்வரி நன்றி கூறினாா். பேராசிரியா் சஜீவ் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தாா்.

X
Dinamani
www.dinamani.com