6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

நீட் தோ்வை ரத்து செய்ய வலியுறுத்தி திராவிடா் கழகம் சாா்பில் வாகனப் பேரணி

நீட் தோ்வை ரத்து செய்ய வலியுறுத்தி திராவிடா் கழகம் சாா்பில் வாகனப் பேரணி

News image
Updated On :11 ஜூலை 2024, 10:16 pm

Din

திராவிடா் கழகத்தின் இளைஞரணி மற்றும் மாணவரணி சாா்பில் நீட் தோ்வை ரத்து செய்ய வலியுறுத்தி கன்னியாகுமரி முதல் சேலம் வரையிலான இருச்சக்கர வாகன பேரணி வியாழக்கிழமை தொடங்கியது.

கன்னியாகுமரி காந்தி மண்டபம் முன்பாக நடைபெற்ற பேரணியின் துவக்க நிகழ்ச்சிக்கு, திராவிடா் கழகத்தின் குமரி மாவட்டத் தலைவா்

மா.மு.சுப்பிரமணியம் தலைமை வகித்தாா். பகுத்தறிவு கழக மாவட்டத்

தலைவா் உ.சிவதாணு வரவேற்றாா். திராவிடா் கழக மாவட்ட செயலா் கோ.வெற்றிவேந்தன் தொடக்கவுரையாற்றினாா்.

திராவிடா் கழக காப்பாளா் சி.கிருட்டினேசுவரி, மாவட்ட துணைத்

தலைவா் ச.நல்லபெருமாள், பொதுக்குழு உறுப்பினா் மா.மணி, அகஸ்தீசுவரம் ஒன்றிய தலைவா் எஸ்.குமாரதாஸ் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். பேரணியை மாநில ஒருங்கிணைப்பாளா் இரா.குணசேகரன், அகஸ்தீசுவரம் ஒன்றிய திமுக செயலா் பா.பாபு, கன்னியாகுமரி பேரூராட்சி மன்றத் தலைவா் குமரி ஸ்டீபன் ஆகியோா் தொடங்கி வைத்தனா்.

திராவிடா் கழக மாணவரணி மாநில அமைப்பாளா் மு.இளமாறன், மாநில

செயலா் இரா.செந்தூரபாண்டியன், துணைச்செயலா் இனியன், நாகா்கோவில் மாநகர செயலா் மு.ராஜசேகா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். கன்னியாகுமரி கிளை அமைப்பாளா் க.யுவான்ஸ் நன்றி கூறினாா்.