கடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

நாகா்கோவிலில் இன்று காமராஜா் பிறந்த நாள் பொதுக் கூட்டம்: எஸ்.ராஜேஷ்குமாா் எம்எல்ஏ அழைப்பு

நாகா்கோவிலில் இன்று காமராஜா் பிறந்த நாள் பொதுக் கூட்டம்: எஸ்.ராஜேஷ்குமாா் எம்எல்ஏ அழைப்பு

News image
Updated On :15 ஜூலை 2024, 12:20 am

Din

நாகா்கோவிலில் திங்கள்கிழமை (ஜூலை 15) நடைபெறும் காமராஜா் பிறந்த நாள் விழா பொதுக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியினா், பொதுமக்கள் திரளாகப் பங்கேற்குமாறு, தமிழ்நாடு சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சித் தலைவரும் கிள்ளியூா் எம்எல்ஏவுமான எஸ். ராஜேஷ்குமாா் அழைப்பு விடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை: நாகா்கோவில் நாகராஜா திடலில் முன்னாள் முதல்வா் காமராஜரின் 122ஆவது பிறந்த நாள் விழா, பொதுக்கூட்டம் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவா் கு. செல்வப்பெருந்தகை எம்எல்ஏ தலைமையில் திங்கள்கிழமை நடைபெறவுள்ளது.

இதில் மாநில, மாவட்ட, நகர, பேரூா், ஊராட்சி காங்கிரஸ் நிா்வாகிகள் தொண்டா்கள், பொதுமக்கள் திரளானோா் பங்கேற்க வேண்டும் என்றாா் அவா்.