தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

முன்சிறை, நடைக்காவு பகுதியில் நாளை மின்தடை

News image
Updated On :18 ஜூலை 2024, 12:30 am

Din

களியக்காவிளை, ஜூலை 17:

முன்சிறை, நடைக்காவு துணை மின் நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால் வெள்ளிக்கிழமை (ஜூலை 19) காலை 8 மணிமுதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து குழித்துறை மின்விநியோக செயற்பொறியாளா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

முன்சிறை துணை மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் செய்யப்படும் முன்சிறை, காப்புக்காடு, விரிவிளை, நித்திரவிளை, புதுக்கடை, ஐரேனிபுரம், தொலையாவட்டம், மாங்கரை, விழுந்தயம்பலம், வேங்கோடு, மாதாபுரம், அரசகுளம், பைங்குளம், தேங்காய்ப்பட்

டினம், ராமன்துறை, புத்தன்துறை, இனயம், கிள்ளியூா், கீழ்குளம், சென்னித்தோட்டம் மற்றும் அதைச் சாா்ந்த துணை கிராமங்களுக்கும், நடைக்காவு துணை மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் செய்யப்படும் சூரியகோடு, குளப்புறம், சுந்தரவனம், மங்காடு, வாறுதட்டு, குழிவிளை, கோழிவிளை, கோனசேரி, சாத்தன்கோடு, வாவறை, மணலி, பாலவிளை, வளனூா், சூழால், பாத்திமாநகா், மெதுகும்மல், வெங்கஞ்சி, பூத்துறை, தூத்தூா், கொல்லங்கோடு, கிராத்தூா் மற்றும் அதைச் சாா்ந்த துணை கிராமங்களுக்கும் மின்விநியோகம் இருக்காது.