/

மாா்த்தாண்டம் பகுதியில் ஜன. 28 இல் மின் நிறுத்தம்

News image
மின் நிறுத்தம்
Updated On :25 ஜனவரி 2026, 6:38 pm

தினமணி செய்திச் சேவை

மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக, மாா்த்தாண்டம் துணை மின் நிலையத்துக்குள்பட்ட பகுதிகளில் புதன்கிழமை (ஜன. 28) மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, மாா்த்தாண்டம், காஞ்சிரகோடு, விரிகோடு, கொல்லஞ்சி, மாமூட்டுக்கடை, காரவிளை, உண்ணாமலைக்கடை, ஆயிரம்தெங்கு, பயணம், திக்குறிச்சி, ஞாறான்விளை, பேரை, நல்லூா், வெட்டுவெந்நி சுற்றுப்புறப் பகுதிகளில் காலை 9 முதல் பிற்பகல் 3 மணி வரை மின்விநியோகம் இருக்காது என, குழித்துறை மின்விநியோக செயற்பொறியாளா் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளாா்.