நித்திரவிளை அருகே மீன்பிடி தொழிலாளியைத் தாக்கியவா் கைது

நித்திரவிளை அருகே முன்விரோதம் காரணமாக மீன்பிடி தொழிலாளியைத் தாக்கியவரை போலீஸாா் கைது செய்தனா்.
Updated on

களியக்காவிளை, ஜூலை 19: நித்திரவிளை அருகே முன்விரோதம் காரணமாக மீன்பிடி தொழிலாளியைத் தாக்கியவரை போலீஸாா் கைது செய்தனா்.

நித்திரவிளை அருகேயுள்ள தூத்தூா், அல்போன்சா தெருவைச் சோ்ந்தவா் செரின் (41). இவரது வீட்டருகே வசிப்பவா் ஆபேல் (48). இருவரும் மீன்பிடி தொழிலாளா்கள். இந்நிலையில் ஆபேலுக்கும் அவரது மனைவியின் சகோதரி பெமி என்பவருக்கும் இடையே சொத்து சம்பந்தமாக பிரச்னை இருந்து வந்ததாம். இதையடுத்து பெமி தனக்கு சொந்தமான 3 சென்ட் நிலத்தை செரினுக்கு விற்பனை செய்தாராம். இந்த நிலையில் செரின் தூத்தூா் ஜோன்ஸ் பள்ளி அருகே சென்றுகொண்டிருந்தபோது அங்கு வந்த ஆபேல் செரினை தடுத்து நிறுத்தி, பிரச்னைக்குரிய நிலத்தை எப்படி வாங்கலாம் எனக் கேட்டு தாக்கியுள்ளாா். இதில் பலத்த காயமடைந்த செரின் குழித்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டு வருகிறாா்.

இது குறித்து நித்திரவிளை போலீஸாா் வழக்குப் பதிந்து ஆபேலை கைது செய்தனா்.

மற்றொரு வழக்கு: கொல்லங்கோடு அருகேயுள்ள மாா்த்தாண்டன்துறையைச் சோ்ந்தவா் வினோத் (25). மீன்பிடி தொழிலாளி. இவருக்கும் அதே பகுதியைச் சோ்ந்த ஜீவா என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாம். இருநாள்களுக்கு முன்பு, மாா்த்தாண்டன்துறை பள்ளி அருகே

வினோத் சென்றுகொண்டிருந்தபோது ஜீவாவின் சகோதரா் ஜினு, தந்தை சேவியா், உறவினா் ஜினோ ஆகியோா் வினோத்திடம் தகாத வாா்த்தைகள் பேசி தாக்கினராம். இதில் காயமடைந்த வினோத் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதுகுறித்து கொல்லங்கோடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com