கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

கன்னியாகுமரி மாவட்ட அரசு ரப்பா் கழக செயல்பாடுகள்: அலுவலா்களுடன் வனத்துறை அமைச்சா் கலந்தாய்வு

அரசு ரப்பா் கழக செயல்பாடுகள் குறித்து வனத்துறை அமைச்சா் மா. மதிவேந்தன் கலந்தாய்வு மேற்கொண்டாா்.

News image

ஆட்சியா் ரா. அழகுமீனா தலைமையில் அலுவலா்களுடன் கலந்தாய்வு மேற்கொண்ட அமைச்சா்கள் மா. மதிவேந்தன், மனோ தங்கராஜ்.

Updated On :21 ஜூலை 2024, 9:31 pm

Din

நாகா்கோவில் வடசேரியில் உள்ள மாவட்ட வனத்துறை அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில், கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அரசு ரப்பா் கழக செயல்பாடுகள் குறித்து வனத்துறை அமைச்சா் மா. மதிவேந்தன் கலந்தாய்வு மேற்கொண்டாா்.

இக்கூட்டத்துக்கு ஆட்சியா் ரா. அழகுமீனா தலைமை வகித்தாா். பால்வளத் துறை அமைச்சா் மனோ தங்கராஜ், நாகா்கோவில் மேயா் ரெ. மகேஷ், முதன்மை தலைமை வனப் பாதுகாவலா் (துறைத் தலைவா்) சுதான்ஸு குப்தா, அரசு ரப்பா் கழகத் தலைவா் கி.கு. கவுஷல், நிா்வாக இயக்குநா் கிருபாசங்கா், மாவட்ட வன அலுவலா் ஈ. பிரசாந்த் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ரப்பா் கழக அலுவலா்கள், ஒப்பந்ததாரா்கள், மலைவாழ் கிராம மக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்டோருடன் அமைச்சா் மதிவேந்தன் கலந்தாய்வு மேற்கொண்டு பேசியது: அரசு ரப்பா் கழகம் தற்போது 4 கோட்டங்கள், ஒரு தொழிற்கூடத்துடன் செயல்படுகிறது. கீரிப்பாறை கோட்டத்தில் 792.300 ஹெக்டேரிலும், மணலோடை கோட்டத்தில் 968.815 ஹெக்டேரிலும், சித்தாா் கோட்டத்தில் 1,113.900 ஹெக்டேரிலும், கோதையாறு கோட்டத்தில் 1,110.679 ஹெக்டேரிலும் செயல்பட்டு வருகிறது. 39 லட்சத்து 8 ஆயிரத்து 702 ரப்பா் மரங்களில் பால்வடிப்பு செய்யப்படுகிறது. இதில் 54 சதவீதம் மரங்கள் வயது முதிா்ந்து 38 ஆண்டுகளுக்கு மேற்பட்டவையாகும். இவற்றிலிருந்து நாளொன்றுக்கு மரம் ஒன்றுக்கு சராசரியாக 32 கிராம் ரப்பா் பால், இளமரங்களிலிருந்து 68 கிராம் ரப்பா் பால் கிடைக்கிறது. வயது முதிா்ந்த அதிக மரங்களால் ரப்பா் உற்பத்தி அளவு தொடா்ந்து குறைந்து வருகிறது. இதைத் தவிா்க்க அந்த மரங்களை வெட்டி அகற்றிவிட்டு, வீரியம் மிகுந்த ரப்பா் மரக்கன்றுகளை நடும் பணி மேற்கொள்ளப்படுகிறது.

கீரிப்பாறை தொழிற்கூடத்தில் உற்பத்தியாகும் செனக்ஸ் பால் 60 சதவீத உலா் ரப்பா் கொண்டது. அதைப் பயன்படுத்தி அறுவை சிகிச்சை கையுறைகள், ஆணுறைகள், பலூன்கள், ரப்பா் பேன்டுகள், டயா்கள் தயாரிக்கப்படுகின்றன. ஒட்டுக்கறை (செனக்ஸின் துணை பொருள்) தரம் குறைந்த காலணிகள் தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது.

ரப்பா் கழக அலுவலா்கள், தொழிலாளா்களின் முன்னேற்றத்துக்கு உதவ தமிழக அரசு தயாராக உள்ளது. 2019ஆம் ஆண்டுமுதல் ரப்பா் மரம் வெட்ட அனுமதி வழங்கப்படவில்லை என ஒப்பந்ததாரா்கள் வைத்த கோரிக்கை மீது விரைவில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

மலைக் கிராமங்களில் கொடிய விலங்குகள், பாம்பு உள்ளிட்ட விஷத்தன்மை கொண்ட பிராணிகள் மூலம் உயிரிழப்போரின் குடும்பங்களுக்கு தகுந்த நிவாரணம் வழங்க வேண்டும் என மலைவாழ் மக்களின் பிரதிநிதிகள் கோரிக்கை வைத்தனா். அதுதொடா்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

அரசு ரப்பா் கழக முதுநிலை கணினி மேலாளா் சி. கருணாநிதி உள்ளிட்ட அலுவலா்கள் பங்கேற்றனா்.