குழித்துறை கோட்டத்தில் இன்றுமுதல் ஆக. 3 வரை மின்தடை

திங்கள்கிழமைமுதல் (ஜூலை 29) ஆக. 3 வரை காலை 9 மணிமுதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
Published on

பராமரிப்புப் பணி காரணமாக குழித்துறை கோட்டம் புதுக்கடை, கருங்கல், கொல்லங்கோடு, ரவிபுதூா்கடை, கிள்ளியூா், பள்ளியாடி, சூரியகோடு பிரிவுகளுக்குள்பட்ட குறிப்பிட்ட சில பகுதிகளில் திங்கள்கிழமைமுதல் (ஜூலை 29) ஆக. 3 வரை காலை 9 மணிமுதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, மின்சாரம் தடைபடும் பகுதிகள்: ஜூலை 29 - மாராயபுரம், அஞ்சாலிக்கடவு, தொழிக்கோடு, கானாவூா், எள்ளுவிளை, மிருகம்பாடி, கைதவிளாகம், வடக்கு மாதாபுரம், வாழைத்தோட்டம், வெட்டுவிளை, தாமரைகுளம், ஊசிக்கோடு, ஆலத்துறை, சேரிக்கடை, திட்டைகாலனி, வாறுதட்டு, கல்லாலுமூடு, பென்னாவிளை பகுதிகள்; ஜூலை 30 -பாா்த்திவபுரம், பிளாக் ஆபீஸ், கல்நாட்டி, செல்லங்கோணம், புலிமுத்தான்குறிச்சி, விலக்கம் தோட்டம், கல்லறைத் தோட்டம், அம்பலகுளம், பாலமஞ்சேரி, செறுகோல், சீனிவிளை, மெதுகும்மல், குளப்புறம், காசிப்பாறை, நச்சினம்பாறை, இடையன்கோட்டை.

ஜூலை 31 - காட்டுவிளை, வேப்புவிளை, வெள்ளையம்பலம், பண்டாரவிளை, பரமன்கோணம், ஓந்தோணி, இலவுவிளை, நெல்வேலி, பரியாக்கரை, காவுமூலை, மாவிளை, பள்ளியாடி, வாகவிளை, வாழைத்தோட்டம்; ஆக. 1 - சானல்முக்கு, மாடன்விளை, நட்டான்விளை, பழையகாடு, அன்னைநகா், நெடுவிளை, அரியூா்கோணம், நெல்வேலி, முள்ளஞ்சேரி, குமிட்டிவிளை, தட்டான்குளம், கஞ்சிக்குழி, வாணியன்தறை, வயக்கரை; ஆக. 2 - கானாவூா், பெரம்பி, பாறைக்கடை, தாமரைகுளம்; ஆக. 3 - மாங்கரை, காட்டுக்குழி, வடக்குமாங்கரை, செவ்வேலி, கிணற்றுவிளை, செம்மான்விளை, புதுக்கோடு, குழிச்சாணி.

இத்தகவலை குழித்துறை மின்விநியோக செயற்பொறியாளா் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com