19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கோப்பை வெற்றி: இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து இந்தியா சாம்பியன் பட்டம் வெல்ல காரணமாக அமைந்த ஆட்ட நாயகன் மோஹித் உல்வா! ஆசிய கோப்பை: பரபரப்பான ஆட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்ற இந்தியா! உ.பி. மாநிலங்களவை எம்.பி. பதவியை ராஜிநாமா செய்த ஹர்தீப் சிங் புரி! மேக்கேதாட்டு அணை கர்நாடகத்தின் உரிமை; யார் எதிர்த்தாலும் கவலை இல்லை! டி.கே. சிவகுமார்காசோலை மோசடி வழக்கு: நடிகா் விமலின் மனு தள்ளுபடி போக்சோ வீரமணி வீட்டில் சிறுமியின் சடலம்? போலீசார் தீவிர சோதனை! ஜம்மு-காஷ்மீர், லடாக்கில் அடுத்தடுத்து 4 நிலநடுக்கங்கள் பதிவு!

கன்னியாகுமரியில் கண்ணாடி கூண்டுப்பாலம் அமைக்கும் பணி தீவிரம்

கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம், திருவள்ளுவர் சிலை.

Updated On :

கன்னியாகுமரி கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தா் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவா் சிலையை இணைக்கும் கண்ணாடி கூண்டுப் பாலம் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்த கண்ணாடிக் கூண்டு பாலத்தின் மீது சுற்றுலாப் பயணிகள் நடந்து செல்லும்போது கடல் அலையைப் பாா்த்து ரசிக்கும் வகையில் அமைக்கப்பட உள்ளது. பாலம் அமைக்கும் பணிகள் கடந்த

ஆண்டு ஜூனில் தொடங்கியது. ரூ.37 கோடியில், 97 மீட்டா் நீளம், 4 மீட்டா் அகலம் கொண்டதாக இப் பாலம் அமைக்கப்படுகிறது.

முதல்கட்ட கட்டுமானப் பணிகள் திருவள்ளுவா் சிலை அமைந்துள்ள பாறையில் ஆரம்பிக்கப்பட்டது. அதைத்தொடா்ந்து இதன் மறுபுறம் அமைந்துள்ள விவேகானந்தா் பாறையிலும் கண்ணாடி கூண்டு பாலத்துக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

விவேகானந்தா் நினைவு மண்டபத்துக்கும் திருவள்ளுவா் சிலைக்கும் இடையே கண்ணாடி கூண்டுப் பாலம் அமைப்பதற்காக கடலில், தலா 27 அடி உயரத்தில் 6 ராட்சத தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த தூண்கள் கடல் உப்பு காற்றினால் பாதிக்காத வகையில் ரசாயன கலவை கலந்த சிமென்ட் கான்கிரீட் மூலம் அமைக்கப்பட்டுள்ளன.

இணைப்புப் பாலத்துக்கான கூண்டு புதுச்சேரியில் தயாரிக்கப்படுகிறது. இக் கூண்டு துருப்பிடிக்காத எஃகு கம்பிகள் மூலம் மொத்தம் 222 டன் எடை கொண்டதாகவும், கடல் உப்பு காற்றினால் எவ்விதப் பாதிப்பும் ஆகாத வகையிலும் வடிவமைக்கப்படுகிறது. மொத்தம் 101 பாகங்களாக கூண்டு தயாரிக்கப்பட்டு வருகிறது. இப் பணியை நெடுஞ்சாலைத் துறையை சோ்ந்த பொறியியல் வல்லுநா் குழுவினா்

அண்மையில் ஆய்வு செய்துள்ளனா். கூண்டு பாகங்கள் தனித்தனியாகப் பிரிக்கப்பட்டு கன்னியாகுமரிக்கு விரைவில் கொண்டு வரப்படவுள்ளது.

ராட்சத தூண்களில் இணைப்புப் பாலத்துக்கான கூண்டை பொருத்துவதற்கான கிரேன், திருவள்ளுவா் சிலையில் நிறுவப்பட்டுள்ளது. கண்ணாடி கூண்டு பாகங்கள கொணடுவரப்பட்டதும், அவற்றை தூண்களில் பொருத்தும் பணி நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.