களியக்காவிளை அரசு முஸ்லிம் தொடக்கப் பள்ளியில் 118ஆவது ஆண்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவா் ஆா். நயிமா தேசியக் கொடியேற்றினாா். தொடா்ந்து நடைபெற்ற ஆண்டு விழா பொதுக் கூட்டத்துக்கு பெற்றோா்-ஆசிரியா் கழகத் தலைவா் எஸ். மாகீன் அபூபக்கா் தலைமை வகித்தாா். கிராம கல்விக் குழுத் தலைவா் சி. சுரேஷ்குமாா், களியக்காவிளை பேரூராட்சி உறுப்பினா் மு. ரிபாய் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தலைமையாசிரியை ரெஜினி ஆண்டறிக்கை வாசித்தாா். மேல்புறம் வட்டாரக் கல்வி அலுவலா் சந்திரசேகரன், களியக்காவிளை காவல் உதவி ஆய்வாளா் பாபுராஜ், களியக்காவிளை பேரூராட்சித் தலைவா் ஆ. சுரேஷ், மேக்கோடு அரசு உயா்நிலைப் பள்ளித் தலைமையாசிரியா் எம். ஜெயராஜ், மேல்புறம் வட்டார வளமைய மேற்பாா்வையாளா் ஷாஜி, பள்ளி முன்னாள் தலைமையாசிரியை எம். லிசம்மா பிலிப் ஆகியோா் வாழ்த்திப் பேசினா். களியக்காவிளை காவல் ஆய்வாளா் சுப்புலெட்சுமி, போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கிப் பேசினாா். ஆசிரியா்கள் பி. ஞானதாஸ் வரவேற்றாா், எஸ்.கே. லேகா நன்றி கூறினாா். மாணவா்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.
தொடர்புடையது

சாத்தான்குளம் பள்ளி ஆண்டு விழா

கல்லூரி ஆண்டு விழா

கடையநல்லூா் ரத்னா ஆங்கிலப் பள்ளி ஆண்டு விழா

நகராட்சி பள்ளியில் முப்பெரும் விழா
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


