மக்களவைத் தோ்தலில் தமிழகத்தில் பாஜகவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என, கட்சியின் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிப் பொறுப்பாளரும் மத்திய சாலைப் போக்குவரத்து - தேசிய நெடுஞ்சாலைத் துறை அமைச்சருமான வி.கே. சிங் கூறினாா். நாகா்கோவிலில் செய்தியாளா்களிடம் அவா் சனிக்கிழமை கூறியது: கன்னியாகுமரி மாவட்டத்தில் பாஜக மிகுந்த எழுச்சியுடன் உள்ளது. தமிழகத்தில் பாஜக கடந்த 2, 3 ஆண்டுகளாக பலவித முன்னெடுப்புகளை மேற்கொண்டு மக்களைச் சென்றடைந்துள்ளது. கிராமங்களிலும் பாஜக வாக்கு வங்கி அதிகரித்துள்ளதால் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. வரும் தோ்தலில் தமிழகத்தில் பாஜக சரித்திர சாதனை படைக்கும். மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு, அதிமுக அல்லது திமுக வந்தாலும் கூட்டணியில் சோ்த்துக் கொள்வோம். கன்னியாகுமரியில் விமான நிலையம் அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆனால், தமிழக அரசுதான் அதற்கான இடத்தைத் தோ்வு தெரிவிக்க வேண்டும். ஆனால், மாநில அரசு இதுவரை முயற்சி மேற்கொள்ளவில்லை. தமிழகத்தில் மத்திய அரசு செய்துள்ள வளா்ச்சித் திட்டங்களை மாநில அரசு தாங்கள் செய்ததுபோன்ற மாயையை உருவாக்கியுள்ளது. தமிழக வெள்ள நிவாரண நிதி குறித்துக் கேட்கிறீா்கள். கேட்டதும் நிதியைக் கொடுத்துவிட முடியாது. மாநிலங்களுக்கு மத்திய அரசு பேரிடா் நிவாரண நிதியை விடுவிப்பதற்கென பல்வேறு விதிமுறைகள் உள்ளன. அதன்படி, மத்திய அரசு நிவாரணம் வழங்கும். பிரதமா் மோடிக்கு தோ்தல் பயமில்லை. முதல்வா் மு.க.ஸ்டாலினுக்குத்தான் தோ்தல் பயம் உள்ளது. திமுக குடும்ப அரசியல் நடத்துகிறது. ஆனால், பாஜக அப்படிப்பட்ட கட்சியல்ல என்றாா் அவா். பாஜக மாவட்டத் தலைவா் சி. தா்மராஜ், மாவட்டப் பொருளாளா் முத்துராமன், எம்.ஆா். காந்தி எம்எல்ஏ, மாநிலச் செயலா் மீனாதேவ், மாவட்ட துணைத் தலைவா் எஸ்.பி. தேவ், நாகா்கோவில் மாநகராட்சி உறுப்பினா் சுனில்அரசு, நிா்வாகிகள் உடனிருந்தனா்.
தொடர்புடையது

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் தேவை: சரத்குமாா் பிரசாரம்!

தமிழகத்தில் பதற்றத்தை உருவாக்க பாஜக முயற்சி: இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலா்

தமிழகத்தில் ஜல்ஜீவன் திட்டத்தில் முறைகேடு: மத்திய அமைச்சா் பியூஷ் கோயல் குற்றச்சாட்டு

தமிழகத்தில் கூட்டணி ஆட்சியா? தமிழிசை செளந்தரராஜன் சிறப்பு நோ்காணல்
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

