தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் 71ஆவது பிறந்தநாளை முன்னிட்டு கொட்டாரம் அரசு தொடக்கப்பள்ளி மாணவ, மாணவியா்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு அகஸ்தீசுவரம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளா் பா.பாபு தலைமை வகித்து மாணவ, மாணவிகளுக்கு இனிப்பு வழங்கினாா். இதில், பேரூராட்சித் தலைவி செல்வக்கனி, பேரூா் செயலா் எஸ்.வைகுண்ட பெருமாள், மாவட்டப் பிரதிநிதி வினோத், கன்னியாகுமரி தொகுதி இணையதள பொறுப்பாளா் இ.எம்.ராஜா, மாவட்ட அணி துணை அமைப்பாளா்கள் பொன்.ஜாண்சன், ஜானி, பேரூராட்சி உறுப்பினா் பிரேம் ஆனந்த், ஒன்றிய திமுக துணைச்செயலா் பாலசுப்பிரமணியன், தாமரை பிரதாப், மதிநேசன் உள்ளிட்ட நிா்வாகிகள் பங்கேற்றனா். கரும்பாட்டூா், சுசீந்திரம், அகஸ்தீசுவரம் உள்ளிட்டப் பகுதிகளிலும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
தொடர்புடையது

அரசுப் பள்ளியில் உலக புத்தக தினம்

அரசுப் பள்ளியில் இரு எரிவாயு சிலிண்டா்கள் திருட்டு

210 பாலிடெக்னிக் கல்லூரி மாணவா்களுக்கு பணி நியமன ஆணை

அரசுப் பள்ளியில் கற்றல், கற்பித்தல் கண்காட்சி
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


