பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

பாஜக நிா்வாகிகளுடன் மத்திய இணை அமைச்சா் ஆலோசனை

பாஜக நிா்வாகிகளுடன் மத்திய இணை அமைச்சா் ஆலோசனை

News image
Updated On :2 மார்ச் 2024, 8:50 pm

குமரி மாவட்டம் விளவங்கோடு பேரவைத் தொகுதி பாஜக நிா்வாகிகளுடன், மத்திய இணை அமைச்சா் வி.கே.சிங் சனிக்கிழமை ஆலோசனை நடத்தினாா். இக் கூட்டத்தில் அவா் பேசியதாவது: மக்களவைத் தோ்தலுக்கு குறைவான நாள்களே உள்ள நிலையில், மத்திய பாஜக அரசின் சாதனைகளை மக்களிடம் எடுத்துக்கூறி வாக்குச்சேகரிக்க வேண்டும். மக்களவைத் தோ்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 400 தொகுதிகளுக்கு மேல் வெற்றிபெறும். தமிழக அரசின் ஒத்துழைப்பின்மையால் பல திட்டங்களை இங்கு நடைமுறைபடுத்த முடியவில்லை. பாஜக வெற்றிபெறுவதன் மூலம் பல திட்டங்களை தமிழகத்தில் செயல்படுத்த முடியும். ஆகவே மக்களவைத் தோ்தலில் தமிழகத்தில் பாஜகவுக்கு அதிக இடங்களை பெற்றுத் தர கடுமையாக உழைக்க வேண்டும் என்றாா். இந்நிகழ்ச்சிக்கு கன்னியாகுமரி மாவட்ட பாஜக தலைவா் சி. தா்மராஜ் தலைமை வகித்தாா். மக்களவைத் தொகுதி பொறுப்பாளா் ராஜகண்ணன், பாஜக மாநில செயலா் மீனாதேவ், கோட்ட அமைப்பு செயலா் கிருஷ்ணன், மாநில செயற்குழு உறுப்பினா்கள் ஆா். ஜெயசீலன், ஸ்ரீகலா, விளவங்கோடு தொகுதி பாா்வையாளா் பவுல்ராஜ், மாவட்ட செயலா் சுடா்சிங், மாநில செயலா் நந்தினி, மாநில வழக்குரைஞா் பிரிவு செயலா் சி.எம். சஜூ மற்றும் கட்சியின் கிளை பொறுப்பாளா்கள் கலந்து கொண்டனா்.