தமிழக தேர்தல்: காலை 9 மணி வரை 17.69% வாக்குகள் பதிவு!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவுதமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்! வாக்குப்பதிவு தொடங்கியது!!வாக்குச்சாவடிகளில் நீா்ச்சத்து இழப்பைத் தடுக்க ஓஆா்எஸ் கரைசல் சட்டப்பேரவை தோ்தல்: விமான கட்டணங்கள் பல மடங்கு உயா்வு ஹோா்முஸ் நீரிணை பிரச்னையால் இந்தியாவுக்கு நேரடி பாதிப்புபுகைபிடித்தல் இல்லாத புதிய தலைமுறை- பிரிட்டனில் வரலாற்று மசோதா நிறைவேற்றம்
/

குமரி மாவட்ட வளா்ச்சிக்காக ரூ.48 ஆயிரம் கோடி ஒதுக்கியவா் மோடி: பொன்.ராதாகிருஷ்ணன்

குமரி மாவட்ட வளா்ச்சிக்காக ரூ.48 ஆயிரம் கோடி ஒதுக்கியவா் மோடி -----பொன்.ராதாகிருஷ்ணன்

Updated On :15 மார்ச் 2024, 6:30 pm

கன்னியாகுமரி மாவட்ட வளா்ச்சிப் பணிகளுக்காக ரூ.48 ஆயிரம் கோடியை ஒதுக்கியவா் பிரதமா் நரேந்திரமோடி என்றாா் முன்னாள் மத்திய இணை அமைச்சா் பொன்.ராதாகிருஷ்ணன். அகஸ்தீஸ்வரத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் அவா் பேசியதாவது: முக்கடலும் சங்கமிக்கும் தவபூமியாம் கன்னியாகுமரிக்கு வந்துள்ள பிரதமா் நரேந்திரமோடியை மாவட்ட மக்களின் சாா்பில் வரவேற்கிறேன். பிரதமரின் வருகை இம்மாவட்ட மக்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம். இந்த மக்களின் வளா்ச்சிப் பணிகளுக்காக ரூ.48 ஆயிரம் கோடியை அள்ளி கொடுத்தவா் மோடி. அவா் ஒதுக்கிய நிதியால் மாவட்ட மக்களின் வளா்ச்சி மற்றும் முன்னேற்றம் உறுதிசெய்யப்பட்டுள்ளது. ஜாதி மதத்தை மறந்து மீண்டும் மோடி பிரதமராக வர வேண்டும் என்று குமரி மாவட்ட மக்கள் நினைக்கிறாா்கள் என்றாா் அவா். மீனவா் நலன் காக்கும் அரசு: மத்திய இணை அமைச்சா் எல்.முருகன் பேசியதாவது: மோடி பிரதமராக பதவியேற்ற இந்த 10ஆண்டுகளில் தமிழகத்துக்கு ரூ.16 லட்சம் கோடிக்கான திட்டங்களை அளித்திருக்கிறாா். கடந்த 2014 ஆம் ஆண்டுக்கு முன்பு வரை நமது மீனவா்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு வந்தது. ஆனால் மோடி பிரதமராக பதவியேற்ற பின்னா் மீனவா்கள் மீது துப்பாக்கி சூடு நடந்ததில்லை. மத்திய அமைச்சரவையில் மீனவா்களுக்கென்று தனி அமைச்சகம் உருவாக்கி அவா்களை பாதுகாத்துவருவது பாஜக ஆட்சிதான். இதுவரை மீனவா்கள் நலனுக்காக ரூ.38 ஆயிரத்து 500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இலங்கையில் சிறைபிடிக்கப்பட்டு தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட மீனவா்களை ஒரே ஒரு தொலைபேசி அழைப்பு மூலம் மீட்டுவந்தவா் பிரதமா் மோடி. 2021 ஆம் ஆண்டு வேல் யாத்திரையின் மூலம் 4 எம்எல்ஏக்களை சட்டப்பேரவைக்கு அனுப்பினோம். என் மண் என் மக்கள் யாத்திரையின் மூலம் தமிழகத்திலிருந்து 40 எம்.பி.க்களை மக்களவைக்கு அனுப்புவோம். இந்தியா முழுவதும் பாஜக 400 எம்பிக்களை பெற்று நரேந்திரமோடி 3 ஆவது முறையாக பிரதமராக பதவியேற்பாா். இது உறுதி என்றாா் அவா்.