மக்களவைத் தோ்தல்: உரிமம் பெற்ற துப்பாக்கிகளை ஒப்படைக்க அறிவுறுத்தல்

மக்களவைத் தோ்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால் கன்னியாகுமரி மாவட்டத்தில் உரிமம் பெற்று துப்பாக்கிகளை வைத்திருப்பவா்கள் காவல் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் பி.என். ஸ்ரீதா் அறிவுறுத்தியுள்ளாா். இது தொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெறவுள்ள மக்களவைத் தோ்தல் மற்றும் விளவங்கோடு சட்டப்பேரவை இடைத்தோ்தலை முன்னிட்டு மாவட்டத்திலுள்ள படைக்கல உரிமம் பெற்ற அனைத்து படைக்கல உரிமதாரா்களும் தங்கள் வசம் வைத்துள்ள உரிமம் பெற்ற துப்பாக்கியை அருகிலுள்ள காவல் நிலைய பொறுப்பு அலுவலரிடம் உடனடியாக ஒப்படைக்க வேண்டும். துப்பாக்கிகளை ஒப்படைக்காமல் பதுக்கி வைத்திருந்தால் அவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதில் அவா் குறிப்பிட்டுள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com